எனக்காக ஒரு விஷயம் பண்ணிருக்கியா.? ஜீவாவிடம் இருந்து பிரிந்து செல்லும் பிரியா, ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

ஈரமான ரோஜாவே சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பார்த்திபன் காவியா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரும் தேவி, காவியா மற்றும் ஜீவாவின் காதலை பற்றி திரையில் ஒளிபரப்பியதால் குடும்பம் இரண்டாக உடைந்து இருக்கிறது. பிரியா கோபித்துக் கொண்டு குடும்பத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த கதை குறித்து பார்த்தோமானால் பார்த்திபன் மற்றும் பிரியா இருவருக்கும் நிச்சியம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் திருமணத்தன்று பிரியா பார்த்திபனின் அத்தை தேவியால் கடத்தப்பட்டிருப்பார். தேவிக்கு தனது மகளை எப்படியாவது பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர் பிரியாவை திருமணத்தன்று கடத்தி இருப்பார். இதனால் குழப்பம் நீடித்ததால் பிரியாவின் தங்கை காவியாவை பிடித்து பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். காவியாவிற்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர் பார்த்திபனின் தம்பி ஜீவாவை காதலித்து வருவார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எனக்காக ஒரு விஷயம் பண்ணிருக்கியா.? ஜீவாவிடம் இருந்து பிரிந்து செல்லும் பிரியா, ப்ரோமோ இதோ.! 1
அக்கா பிரியாவிற்கு அண்ணன் பார்த்திபனை திருமணம் செய்ய இருப்பதால், பிரியாவின் தங்கையும் பார்த்திபனின் தம்பியும் காதலித்து வருகின்றனர். ஆனால் இந்த விஷயம் குடும்பத்தில் இருக்கும் யாருக்கும் தெரியாது. பிரியா திருமணத்தன்று காணாமல் போனதால் அவரது தங்கை காவியாவை பிடித்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இங்கிருந்து பிரச்சினை தொடங்குகிறது. காவியாவிற்கு பார்த்திபனுடன் வாழப் பிடிக்கவில்லை. மேலும் ஜீவாவை பார்க்கும் பொழுதெல்லாம் அவர்கள் காதலித்த நாட்கள் தான் அவருக்கு ஞாபகம் வருகிறது. தற்போது இந்த விஷயங்கள் எல்லாம் மறந்து பார்த்திபனுக்கும் காவியாவிற்கும் மீண்டும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வரும் பார்த்தியின் அத்தை தேவி பென்டிரைவ் ஒன்றை கொடுத்து அதை திருமண மண்டபத்தில் இருக்கும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்கிறார். அதில் காவியாவும் ஜீவாவும் காதலித்த நாட்களில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் ஓடுகின்றது.


இதைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். மேலும் காவியா தேவியின் காலில் விழுந்து அந்த வீடியோவை தயவுசெய்து நிறுத்தச் சொல்லுங்கள் என்று கதறி அழுகிறார். மேலும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பிரியா கோபித்துக் கொண்டு வெளியேறுகிறார். அவரிடம் காலில் விழுந்து கதறி அழும் ஜீவாவிடம் நீ காவியா சிரித்தால், என்னிடம் வந்து சிரித்து பேசுவாய், காவியாஅழுதால் என்னிடம் வந்து சோகமாக பேசுவாய். நீ காவியாவில் பிரதிபலிப்பாக தான் இத்தனை நாள் என்னிடமிருந்து இருக்கிறாய் என்று சொல்லி கோபித்துக் கொண்டு ஜீவாவிடம் இருந்து வெளியேறி இருக்கிறார். இனி பார்த்திபன் என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியவில்லை, நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்