உன்ன கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இன்னொருத்தர லவ் பண்ணேன்.! உண்மையை உடைத்த காவ்யா

வெளியிட்டது

திருமணத்திற்கு முன்பு தான் ஒருவரை காதலித்து வந்ததாக தற்போது காவியா பார்த்தியிடம் கூறியிருக்கும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதனால் பார்த்திபன் உடைந்து போய் அழுது கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீசன் 2 தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. விரைவில் கிளைமாக்ஸ் காட்சிகள் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இந்தத் தொடரில் பார்த்தியும் ஜீவாவும் அண்ணன் தம்பிகள். பிரியாவும் காவியாவும் அக்கா தங்கைகள். ஆரம்பத்தில் பார்த்திக்கும் பிரியாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனால் பார்த்தியின் தம்பி ஜீவாவும், பிரியாவின் தங்கை காவியாவும் காதலித்து வந்தனர். ஆனால் கடைசி நிமிடத்தில் அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த அக்காவை கடத்தி விட்டதால். பார்த்திபன் வேறு வழியில்லாமல் தம்பி காதலித்து வந்த காவியாவை திருமணம் செய்து கொள்ளும்படி நேர்ந்தது. இதனால் தம்பி ஜீவா அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட அக்கா பிரியாவை கல்யாணம் செய்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உன்ன கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இன்னொருத்தர லவ் பண்ணேன்.! உண்மையை உடைத்த காவ்யா 1
இந்த திருமணத்தில் காவியாவிற்கு சிறிதும் உடன்பாடில்லை. அக்காவிற்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தான் எப்படி திருமணம் செய்ய முடியும் என்று அவர் மறுத்தார். இருப்பினும் இருவருக்கும் வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனால் காவியாவிற்கும் பார்த்திக்கும் இத்தனை வருடங்கள் ஆகியும் நல்ல உறவு ஏற்படவில்லை. இதனால் காவியா விவாகரத்திற்கும் கோர்ட்டில் மனு செய்திருந்தார். ஆனால் ஆறு மாத காலம்தான் ஆகியிருக்கிறது. இன்னும் ஆறு மாத காலம் நீங்கள் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் பார்த்திக்கு அவரது அத்தை மகளை திருமணம் செய்து வைக்க திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால் இதில் பார்த்திக்கு சிறிதும் விருப்பமில்லை. இதனால் பார்த்தியின் மனதை மாற்றுவதற்காக அவரது அத்தை காவியா திருமணத்திற்கு முன்பு ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்தார் என்கிற உண்மையை பார்த்தியிடம் கூறுகிறார். ஆனால் பார்த்து இதை நம்பவில்லை.

இதனால் வீட்டிற்கு வரும் காவியாவிடம் திருமணத்திற்கு முன்பு நீ யாரையும் காதலித்து வந்தாயா என்று கேட்கிறார்.
அதற்கு காவியாவும் ஆம் நான் காதலித்து வந்தேன் என்கிற பதிலை மட்டும் சொல்லிவிட்டு அழுது கொண்டே ஓடுகிறார். ஆனால் அவர் காதலித்தது அவரின் தம்பி ஜீவாவைத் தான் என்பதை கூறவில்லை. இருந்தபோதிலும் ஏற்கனவே யாரையோ காதலித்ததால் தான் தன்னை இப்படி வெறுக்கிறார் என்று உடைந்து போய் பார்த்தி அழுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்