ஈரமான ரோஜாவே சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் காவியாவிற்கு தற்போது கரு கலைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் மருத்துவமனையிலேயே மனம் உடைந்து கதறி அழுது கொண்டிருக்கிறார் காவியா. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடரில் பல விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. பல தடைகளை மீறி தற்போது தான் காவியாவும் பார்த்திபனும் ஒன்றாக இணைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் ஐஏஎஸ் தேர்விற்காக வெளியூருக்கு செல்லும் காவியாவிற்கு தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போதே அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். அப்போது அங்கு டாக்டர் காவியாவின் வயிற்றில் வளர்ந்த இரட்டைக் குழந்தைகளும் கலைந்து விட்டதாக கூறுகின்றனர். ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பார்த்திபனின் தம்பி ஜீவாவை காதலித்து வருகிறார் காவியா. பார்த்திபனுக்கு காவியாவின் அக்கா பிரியாவை திருமணம் நிச்சயித்து இருந்தனர். ஆனால் பிரியாவை சிலர் கடத்தி விட்டதால் தம்பி காதலித்து வந்த காவியாவை அண்ணன் பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். அங்கிருந்து பிரச்சினை தொடங்குகிறது. இத்தனை நாட்களாக காவியாகவும் பார்த்திபனும் சேராமல் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கியிருந்தனர். காவியாவின் வயிற்றில் இரட்டை குழந்தைகள் வளர தொடங்கியிருந்தது. இந்த நிலையில் காவியா ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்காக தற்போது விமானத்தில் ஏறி வெளியூருக்கு பயணம் ஆகி இருந்தார். இதனால் தற்போது அவரின் வயிற்றில் வளர்ந்து வந்த இரட்டை குழந்தைகளும் கலைந்து இருக்கிறது. அந்த சோகமான ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது.
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு காவியாவை மருத்துவர் பரிசோதனை செய்கிறார். அப்போது தனக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதாக காவியா கூறுகிறார். மேலும் தன் குழந்தைகளுக்கு ஒண்ணும் ஆகவில்லை தானே என்று கேட்கிறார். அப்போது மருத்துவர் என்னை மன்னித்துவிடுமா உனக்கு கருக்கலைப்பு ஏற்பட்டு விட்டது என்று சொல்லி மருத்துவர் கூறுகிறார். இதனால் தரையில் விழுந்து கதறும் காவியா என் குழந்தைகள் எனக்கு வேண்டும் என்று சொல்லி அழுகிறார். காவியாவை பார்க்க மிகப் பாவமாக இருக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television