எதிர்நீச்சல் சீரியலின் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் குணசேகரனுக்கு தற்போது உடலில் ஒரு பக்கம் பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதை நினைத்து தற்போது நந்தினி வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியான தொடர்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த தொடரில் தற்போது அப்பத்தாவின் 40% பங்குகளை ஜீவானந்தம் அபகரித்துக் கொண்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான குணசேகரன் தூக்கமில்லாமல் தவித்து வருகிறார். மேலும் ஜீவானந்தம் தனது கனவில் வந்து துப்பாக்கியால் சுடுவது போன்று கனவில் வருவதாகவும் நள்ளிரவில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று குணசேகரன் வீட்டிற்கு வந்த ஆடிட்டர் வீட்டின் பங்குகளையும் ஜீவானந்தம் அபகரித்துக் கொண்டதாக அதிர்ச்சி தகவலை கூறுகிறார். அதனால் மனமுடைந்த போன குணசேகரனுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. அவரை கதிரும், கரிகாலனும் மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது பக்கவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV