தமிழும் சரஸ்வதியும் சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோதை மற்றும் நடேசன் இருவரின் அறுபதாவது திருமணத்திற்கு வருகை தரும் தமிழ் மற்றும் சரஸ்வதியை ராகினியும் கார்த்திக்கும் இணைந்து அவமானப்படுத்துகின்றனர். பின்னர் நடேசன் அவர்கள் இருவரையும் மிரட்டி தமிழ் மற்றும் சரஸ்வதியை தனக்கு தலையில் தண்ணீர் ஊற்ற வைக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விறுவிறுப்புக்கும் சுவாரசியத்திற்கும் சிறிதும் பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் தமிழும் சரஸ்வதியும். இதில் கோதையின் மகன் தமிழ், மருமகன் அர்ஜுனனை கத்தியால் குத்தி விட்டதாக தவறாக நம்பி தமிழை வீட்டை விட்டு வெளியேறுகிறார் கோதை. வெளியேறிய தமிழ் தற்போது தனி கம்பெனி, அசோசியேஷன் சேர்மன் என்று ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழ் மீது எந்த தவறும் இல்லை என்பது நடேசனுக்கு தெரிய வருகிறது. மேலும் அதை தனது மனைவி கோதையிடம் கூறி அவரையும் நம்ப வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதற்கிடையில் நடேசன் மற்றும் கோதைக்கு 60-வது திருமண நாள் வருகிறது. இந்த திருமணத்தை முன் நின்று நடத்த ராகினி, கார்த்திக், வசு, அர்ஜுன் ஆகியோர் முடிவு எடுக்கின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கோவிலில் வைத்து நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழும் சரஸ்வதி மற்றும் நமச்சி ஆகியோர் வருகை தருகின்றனர். அப்போது அங்கு வரும் ராகினி இவர்கள் எதற்காக இங்கு வந்தார்கள் வெளியே போக சொல்லுங்கள் என்று கோபத்தில் கத்துகிறார். அப்போது கோயிலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்று சொல்லி ராகினியை சமாதானப்படுத்துகின்றனர். பின்னர் அனைவரும் தண்ணீர் ஊற்ற ஏக்கத்துடன் தமிழும் சரஸ்வதியும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது சந்திரகலா தமிழையும் சரஸ்வதியை வந்து அழைக்குமாறு கூறுகிறார் அவர்கள் தலையில் தண்ணீர் ஊற்ற வரும்பொழுது, கார்த்திக் இவர்கள் ஏன் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று கேட்க, அப்போது நடேசன் இவர்கள் தண்ணீர் ஊற்றவில்லை என்கிற ஏக்கத்துடன் வாழ்நாள் முழுவதும் எங்களால் வாழ முடியாது என்று காட்டத்துடன் பதில் அளிக்கிறார். பின்னர் தமிழும் சரஸ்வதியும் இணைந்து கோதை மற்றும் நடேசனுக்கு தண்ணீர் ஊற்றுகின்றனர். கோதை மகிழ்ச்சியில் திளைத்த வண்ணம் அமர்ந்திருக்கிறார். அத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைகிறது. நீங்களும் அந்த ப ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்…! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television