பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில் தற்போது பாக்யா இனியாவின் கல்லூரியிலேயே சேர்ந்துவிட்டார். இதை கேட்ட கோபி தற்போது அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தொடர் டி ஆர் பி ரேட்டிங்கில் முதலிடத்திலும் பரபரப்புக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாமலும் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு தற்போது பாக்யா கோபியிடம் இருந்து அந்த வீட்டை தனது வீடாக மாற்றி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது தொழில் தொடங்குவதற்காக வங்கி ஒன்றை அணுகுகிறார் பாக்யா. ஆனால் அங்கு அவருக்கு லோன் தர முடியாது என்று கூறி அனுப்பி விடுகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படித்த பட்டதாரி பெண்களுக்கு மட்டுமே இந்த லோன் வழங்கப்படும் என்று பாக்யாவை அனுப்பி விடுகின்றனர். இதனால் பாக்யா தானும் கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறார். இதை தனது மகள் இனியாவிடம் சென்று கூறுகிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் எழிலும் பாக்கியலட்சுமி அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்கிற விருப்பத்தை எழிலிடம் பாக்யா கூறுகிறார். அப்போது எழில் கல்லூரியின் விண்ணப்ப படிவத்தை எடுத்து நிரப்பி பாக்யாவை கல்லூரியில் சேர்த்து விடுகிறார். இந்த விஷயம் இனியாவிற்கு தெரிய வர அவர் தற்போது தனது தந்தை கோபியிடம் இதை கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபி இந்த வயதில் எந்த கல்லூரியில் பாக்யாவிற்கு சீட்டு கொடுக்கிறார்கள் என்று கேட்கிறார்.

அப்போது இனியா நான் படிக்கும் கல்லூரியிலேயே தான் அம்மாவும் சீட்டு வாங்கி இருக்கிறார்கள் என்று கூற, அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார் கோபி. அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television