பார்த்தியை பார்ப்பதற்காக நர்ஸ் போல மாறுவேடத்தில் வந்த காவ்யா.! சீக்கிரம் சேந்துடுங்க ரெண்டு பேரும்.!

வெளியிட்டது

ஈரமான ரோஜாவே தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் பார்தியை பார்த்துக் கொள்வதற்காக காவியா தற்போது நர்சாக அவரது வீட்டிற்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே தொடர் சற்று வித்தியாசமான கதை அம்சம் கொண்டது. இதில் அண்ணன் பார்த்திபனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் கடைசி நிமிடத்தில் கடத்தப்பட்டு விட்டதால் அந்தப் பெண்ணின் தங்கை காவியாவை பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். கடைசி நிமிடத்தில் கடத்தப்பட்டிருந்த பிரியா கிடைத்துவிட்டதால் வேறு வழி இல்லாமல் பார்த்திபனின் தம்பி ஜீவா பிரியாவை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் ஜீவாவும் காவியாவும் தான் காதலித்து வந்தனர். கடைசி நிமிடத்தில் இந்த ஜோடிகளில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பார்த்தியை பார்ப்பதற்காக நர்ஸ் போல மாறுவேடத்தில் வந்த காவ்யா.! சீக்கிரம் சேந்துடுங்க ரெண்டு பேரும்.! 1
அக்காவை பார்த்திபன் திருமணம் செய்து கொள்வார் என்கிற எண்ணத்தில் இருந்த காவியா, அவரது தம்பி ஜீவாவை காதலித்து வந்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் குழப்பம் ஏற்பட்டு விட்டதால் இந்த திருமணத்தில் காவியாவிற்கு சிறிதும் உடன்பாடு இல்லை. எனவே பார்த்திபனுடன் அவர் விரும்பாத வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மேலும் தான் மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று சொல்லி பார்த்திபன் இடமிருந்து விவாகரத்தும் கேட்கிறார் காவியா. ஏற்கனவே ஒருவரை காதலித்தார் என்ற விஷயம் மட்டுமே தெரிந்த பார்த்திபனின் தாயார் எப்படியாவது காவியாவை பார்த்திபனிடமிருந்து பிரித்து விட வேண்டும் என்று திட்டமிட்டு கொண்டிருக்கிறார். அந்த திட்டத்தில் அவர் வெற்றியும் பெறுகிறார். மேலும் பார்த்திபனின் அத்தை மகள் ரம்யாவை பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு வருடம் இணைந்து வாழ வேண்டும் என்று நீதிமன்றம் பார்த்தி மற்றும் காவியாவிற்கு அறிவுரை வழங்குகிறது.


இருப்பினும் பார்த்தவுடன் வாழ விருப்பம் இல்லாமல் டெல்லிக்கு படிக்கச் செல்வதாக கூறிவிட்டு செல்கிறார் காவியா. இந்த நிலையில் பார்த்திக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தற்போது வீடு திரும்பி இருக்கிறார். அவரைப் பார்த்துக் கொள்வதற்காக தற்போது நர்ஸ் போல் வேடம் அணிந்து வீட்டிற்கு திரும்பி இருக்கிறார் காவியா. அந்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்