விஜய் டிவியில் காமெடியனாக வலம் வந்த தீனா தற்போது வீடு கட்டி, பால் காய்ச்சி, கிரகப்பிரவேசமும் நடத்தி முடித்துள்ளார். அந்த வீட்டின் புகைப்பட ஆல்பம் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சி பல நல்ல கலைஞர்களை உருவாக்கி இருக்கிறது. சாதாரண காமெடியனாக தனது வாழ்க்கையை தொடங்கியவர்கள் இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக நடிகர் சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயனை கூறலாம்.

சிறிய சிறிய நிகழ்ச்சிகளில் காமெடியார்களாக வலம் வந்து கொண்டிருந்த இவர்கள் தற்போது தமிழின் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களுடன் சேர்த்து ராமர், புகழ், பாலா, தங்கதுரை போன்ற பலரையும் எடுத்துக்காட்டாக கூறலாம். பலரும் பல படங்களில் கமிட்டாகி நடித்து முடித்துள்ளனர். அது போன்ற ஒரு கலைஞர் தான் தீனா. இவர் டைமிங் காமெடியிலும், பதிலுக்கு பதில் போடும் கவுண்ட்டரிலும் யாராலும் அடித்துக் கொள்ள முடியாத அளவிற்கு காமெடியனாக வலம் வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு? என்ற ரியாலிட்டி ஷோ மூலமாக அறிமுகமானவர் தீனா. இவர் தனுஷின் பாண்டி படத்தில் தனுஷின் நண்பராக அறிமுகமானார் பின்னர் 2019 ஆம் ஆண்டு தும்பா என்கிற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான கைதி படத்தில் நடிகர் கார்த்திக்கு நண்பன் கதாபாத்திரத்தில் காமெடியனாகவும் நடித்திருந்தார் தீனா. அதன்பின்னர் இவர் மாஸ்டர் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து சில படங்களிலும் காமெடியனாக நடித்து வருகிறார் தீனா. தீனாவின் டைமிங் காமெடிகளுக்கும் கவுண்ட்டர்களுக்கும் என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்த தாடி பாலாஜி, ஆர்த்தி, கிரேஸ் போன்றவர்களை இவர் போன் செய்து கலாய்ப்பது மிகுந்த காமெடியாக இருக்கும். இவரது டைமிங் காமெடிகளுக்காகவே இவரை பலரும் ரசித்தனர்.

தற்போது சில படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அவர் விஜய் டிவி ஷோக்களிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். மேலும் போன் செய்து போட்டியாளர்கள் மற்றும் நடுவர்களை கலாய்த்தும் வருகிறார். தற்போது தீனா தனது சொந்த ஊரில் மிகப்பெரிய வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். அதன் கிரகப்பிரவேசம் இன்று நடைபெற்றிருக்கிறது. அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

ஒரு வீடு சுவர்கள் மற்றும் விட்டங்களால் செய்யப்படுகிறது; ஆனால் இந்த வீடு காதல் மற்றும் கனவுகளுடன் கட்டப்பட்டது. சொந்த ஊரில் எனது கனவு இல்லம் என்று புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். தீனாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் விஜய் டிவி பிரபலங்களாக இருக்கும் கே பி ஒய் பாலா, பிரியங்கா தேஷ்பாண்டே, ரம்யா பாண்டியன், சுனிதா, அதுல்யா ரவி, ரித்திகா போன்ற பல திரைப்பிரபலங்களும் தீனாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.