இரு கால்கள் உடைந்த நண்பனை தாய் போல கவனித்து கொள்ளும் கயல் சைத்ரா ரெட்டி.!

இரண்டு கால்களும் உடைந்த தனது நண்பனை சைத்ரா ரெட்டி கவனித்துக் கொள்ளும் வீடியோவே அவரை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் கயல் சீரியல். இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் பெங்களூர்வை சேர்ந்தவர் சைத்ரா ரெட்டி. இவர் ஆரம்பத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்கிற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்த சீரியலில் சிறப்பான வில்லத்தனங்களை இவர் கொடுத்ததால் இவருக்கு அடுத்தடுத்து நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜீ தமிழில் இருந்து விலகி தற்போது சன் டிவியில் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் சைத்ரா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இரு கால்கள் உடைந்த நண்பனை தாய் போல கவனித்து கொள்ளும் கயல் சைத்ரா ரெட்டி.! 1

விளம்பரம்

இந்த சீரியலில் சைத்ராவுக்கு ஜோடியாக ஆல்யா மானசாவின் கணவர் சஞ்சீவ் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவினாஷ் என்பவர் நடித்து வந்தார். அவினாஷ் கயலுக்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் இந்த சீரியலை விட்டு விலகி இருந்தார். சைத்ராவும் அவினாஷும் இருவரும் நல்ல நண்பர்கள். எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர்கள், பாடலுக்கு ரீல்ஸ் செய்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் அவினாஷுக்கு கால்களில் பிராக்சர் ஏற்பட்டு நடக்க முடியாமல் வீல் சேரில் இருந்து வருகிறார். அப்படி இருந்த போதும் அவர் ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வீல் சேரில் இருந்தபடியே ஆடி டைட்டிலையும் வென்றிருந்தார்.

தொடர்புடையவை  "நான் ஜெனி மேல உயிரே வச்சிருக்கேன்" நீதிபதி முன்பு கைகூப்பி கதறி அழுத செழியன்.! ப்ரோமோ உள்ளே

இரு கால்கள் உடைந்த நண்பனை தாய் போல கவனித்து கொள்ளும் கயல் சைத்ரா ரெட்டி.! 3
தற்போது சைத்ரா அவருடன் இருக்கும் அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் வீல் சேரில் இருக்கும் அவினாஷ் உடன் அவர் விளையாண்டு கொண்டிருக்கிறார். அந்த வீடியோவை பதிவிட்டு நான் சோகமான நேரத்திலும் எனக்கு துணையாக நின்றீர்கள், நான் எனது குடும்பத்தை பிரிந்து கஷ்டப்பட்டபோது உங்களுடைய ஒட்டு மொத்த குடும்பமும் என்னை அவர்களது குடும்பமாக உணர வைத்தது. உங்கள் கால்கள் உடைந்த போது உங்கள் வலியை பார்த்து நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். ஆனால் நீங்கள் அனைத்தையும் நேர்மறையாக எடுத்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் இருக்கும் திறமைக்காக நீங்கள் ஒருநாள் பெரிய ராக் ஸ்டார் ஆக வருவீர்கள். உண்மையான ஒரு நண்பன் போதும், நம்முடைய வாழ்க்கை உந்துதலாக இருக்க என்று அவருடைய வீடியோவை பகிர்ந்து பதிவிட்டு இருக்கிறார். இந்த வீடியோவை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். Watch the below video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment