பார்த்தி மீது காதலை உணரும் காவ்யா.! உணர்வு பூர்வமான திருப்பங்கள்.! ஈரமான ரோஜாவே ப்ரோமோ.!

வெளியிட்டது

தொலைக்காட்சிகளில் நல்ல கதை அம்சத்துடன் கூடிய தொடர்களை ஒளிபரப்புவதில் முன்னிலை வகிப்பது விஜய் டிவி. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கைதேர்ந்ததாக இருக்கிறது. இதில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் அனைத்திற்கும் பல லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர். தொடர்கள் மட்டுமல்லாமல் ரியாலிட்டி ஷோக்கள், காமெடி ஷோக்கள், பிக்பாஸ், குக் வித் கோமாளி என்று இந்த சேனலில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. அப்படி ஒரு முக்கியமான தொடர் தான் ஈரமான ரோஜாவே. இது சீசன் 1 கொடுத்த மிகப்பெரிய வெற்றியால், தற்போது சீசன் 2 எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகர் சித்தார்த் மற்றும் கேபி இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பார்த்தி மீது காதலை உணரும் காவ்யா.! உணர்வு பூர்வமான திருப்பங்கள்.! ஈரமான ரோஜாவே ப்ரோமோ.! 1

சித்தார்த்-பார்த்திபன் என்ற கதாபாத்திரத்திலும், கேபி-காவியா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். இவர்கள் மட்டுமல்லாமல் திரவியம் – ஜீவா கதாபாத்திரத்திலும், சுவாதி – பிரியா கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இந்த கதையைப் பற்றி பார்த்தோம் என்றால், பார்த்திபன் ஜீவா இருவரும் அண்ணன் தம்பிகள். பிரியா மற்றும் காவியா அக்கா தங்கைகள். இதில் பார்த்திபனுக்கு பிரியாவை திருமணம் செய்ய இருந்தது, இதனால் பார்த்தியின் தம்பி ஜீவாவும், பிரியாவின் தங்கை காவியாவும் காதலித்து வந்தனர். ஆனால் திருமணத்தன்று பிரியாவை கடத்தி விட்டதால், பார்த்திபனுக்கு தம்பியின் காதலியான காவியாவை திருமணம் செய்து வைத்துவிட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் அண்ணனுக்கு பேசி முடித்த பிரியாவை தம்பி ஜீவா திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் இந்த கதை பலராலும் விமர்சிக்கப்பட்டது. இருந்த போதும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்டனர். குறிப்பாக காவியா மற்றும் பார்த்தியின் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே பலரும் இந்த நாடகத்தை விரும்பி பார்க்க தொடங்கினர். தற்போது கதைப்படி காவியா கொஞ்சம் கொஞ்சமாக பார்த்திபனை காதலித்து வருகிறார். ஆரம்பத்தில் பார்த்திபனை வெறுத்து ஒதுக்கிய காவியா தற்போது அவரை காதலித்த தொடங்கி இருக்கிறார். அப்படி ஒரு ப்ரோமோவை தான் தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமாவை காண..! Watch the Below Video..!

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்