வாரிசு திரைப்படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியான ஒரு மணி நேரத்திற்குள் சுமார் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது. இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் வாரிசு. இந்த படம் தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, பிரபு, சரத்குமார், யோகி பாபு போன்ற பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆக்ஷன், எமோஷனல், நட்பு, காதல் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை தில் ராஜு தயாரித்து இருக்கிறார். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் மூலமாக முதன்முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் தமன். தமனை பற்றி இயக்குனர் வம்சி கூறும் பொழுது, தமன் எந்த அளவு அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி இருக்கிறார் என்பதை வாரிசு படத்தின் பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று சமீபத்தில் பேசியிருந்தார். இதனால் தமனின் இசை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது வாரிசு படத்தில் இருந்து “ரஞ்சிதமே” என்கிற முதல் பாடலின் ப்ரோமோவை பட குழு வெளியிட்டு இருந்தது. இந்த பாடலை இளைய தளபதி விஜயே பாடி இருக்கிறார்.

சுமார் 30 வினாடிகள் மட்டுமே இருக்கும் இந்த ப்ரோமோ வெளியான அரை மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்தது. தற்போது ஒரு மணி நேரத்தை தாண்டி இருக்கும் நிலையில் இரண்டு மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது. இந்த சாதனை எல்லாம் தளபதியால் மட்டுமே செய்ய முடியும் என்று ரசிகர்கள் மார்தட்டி வருகின்றனர். வாரிசு படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அஜித்தின் துணிவு படத்துடன் இந்த படம் மோத இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். மேலும் இந்த பாடல் தற்போது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. நீங்களும் அந்த பாடலை கேட்க..! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: T-Series