“இதனால தான் இவுங்க லேடி சூப்பர்ஸ்டார்”!! திருமண நாள் அன்று 18 ஆயிரம் குழந்தைகளை பசியாற வைக்கும் நயன் விக்கி!!

நயன்தாரா சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் தாண்டியும் இப்போதும் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் நாயகியாகவும், சோலோ ஹீரோயின் படங்களிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருபவர். கேரளாவில் யாரும் அறிந்திராத ஒரு சிறு ஆர்.ஜேவாக இருந்த இவருடைய திருமணத்தை பார்க்கத்தான் இப்பொது பலரையும் காத்துள்ளார்கள். பிரபல OTT  நிறுவனம் வாங்கி ஒளிபரப்பு செய்வது முதல் , திருமணத்தை டைரெக்ஷன் செய்ய முன்னணி இயக்குனர் ஒப்பந்தம் ஆகும் வரை அனைத்துமே இவர் செய்வது இன்று மக்களை பேச வைத்து கொண்டே இருக்கிறது.

"இதனால தான் இவுங்க லேடி சூப்பர்ஸ்டார்"!! திருமண நாள் அன்று 18 ஆயிரம் குழந்தைகளை பசியாற வைக்கும் நயன் விக்கி!! 1

விளம்பரம்

இரண்டு முறை கசப்பான காதல் அனுபவங்களை கடந்து சினிமாவில் இருந்து விலகிய பின் அட்லீயால் மீண்டும் ராஜா ராணி படத்தின் மூலம் புத்துணர்ச்சி பெற்ற இவருக்கு, மிக பெரிய வெற்றியை, பாராட்டையும் கொடுத்த படம் “நானும் ரவுடி தான்”. 2015ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ஆர்.பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி என பலர் நடித்து வெளியான இந்த படம், மிக பெரிய வெற்றியை பெற்றது. அதன் மூலம் தமிழ் திரையுலகில் தன்னுடைய முதல் வெற்றியை பெற்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் மூலமே நயன்தாராவிற்கு அறிமுகமாகி பின் காதலாக மாறியுள்ளது.

தொடர்புடையவை  எப்படி இருக்கிறது மாமன்னன் திரைப்படம்.? முழு திரைவிமர்சனம்.! Tamilgltiz ரேட்டிங் (?/5)

"இதனால தான் இவுங்க லேடி சூப்பர்ஸ்டார்"!! திருமண நாள் அன்று 18 ஆயிரம் குழந்தைகளை பசியாற வைக்கும் நயன் விக்கி!! 3

விளம்பரம்

கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், எப்போது திருமணம் என்று கேட்கப்பட்ட நிலையில் இப்பொது அதற்கான நேரம் கைகூடியுள்ளது. மிக பெரிய செய்தியாக மாறியுள்ள இவர்களது திருமணம் இன்று காலை நடைபெற்றுள்ளது. தனியார் OTT நிறுவனத்திற்கு கல்யாணத்தை ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதால் இன்று நடைபெற்றுள்ள இந்த திருமணத்திலிருந்து ஒரு புகைப்படங்கள் கூட வெளியே வரவில்லை.

"இதனால தான் இவுங்க லேடி சூப்பர்ஸ்டார்"!! திருமண நாள் அன்று 18 ஆயிரம் குழந்தைகளை பசியாற வைக்கும் நயன் விக்கி!! 5

விளம்பரம்

வருபவர்களுக்கும் நிறைய கட்டுப்பாடுகள். அழைப்பு மட்டும் போதாது, கோட் சொல்ல வேண்டும் , டிரஸ் கோட் போடு வரவேண்டும், கண்டிப்பாக போன் கொண்டுவர கூடாது என பல கட்டுப்பாடுகள். வருகிற ஜூன் 11ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனும், நாயகி நயன்தாராவும் தம்பதிகளாக செய்தியாளர்களை சந்திப்போம் என ஏற்கனவே விக்னேஷ் தெரிவித்து இருந்தார். அன்று தாங்களே திருமண புகைப்படங்களை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்கள்.

"இதனால தான் இவுங்க லேடி சூப்பர்ஸ்டார்"!! திருமண நாள் அன்று 18 ஆயிரம் குழந்தைகளை பசியாற வைக்கும் நயன் விக்கி!! 7

விளம்பரம்

ரசிகர்களுக்கு அனுமதி இல்லையே என்பதால் வருத்தம் அடைந்த ரசிகர்கள், தற்போது நயன்தாரா தமிழ்நாடு முழுவதும் உள்ள 18 ஆயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தனது திருமண நாள் அன்று மதிய விருந்து அளிக்க ஏற்பாடு செய்துள்ளார் என்கிற தகவல் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு பல இதயங்களும் இதன் காரணமாக வாழ்த்து  தெரிவித்து வருகிறது. இதில் சிறப்பு என்னெவென்றால் 1+8= 9 அதனை மனதில் வைத்தே 18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்தளிப்பதாக பலரும் பேசிவருகிறார்கள்.

தொடர்புடையவை  மன௮ழுத்தத்தால் தற்க்கொலைக்கு முயன்ற இளம் நடிகை!

"இதனால தான் இவுங்க லேடி சூப்பர்ஸ்டார்"!! திருமண நாள் அன்று 18 ஆயிரம் குழந்தைகளை பசியாற வைக்கும் நயன் விக்கி!! 9

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment