“முற்றிய மோதல்….சூறையாடப்படும் அ.தி.மு.க தலைமை அலுவலகம்”

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு அ.தி.மு.க கட்சியில் மிக பெரிய அளவிலான சர்ச்சைகள் நடைபெற்று வருகின்றன. பன்னீர்செல்வம் போராடியது, சின்னம்மா வந்தது, பின் அவர் இல்லாமல் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தியது, பின்னர் ஓ.பி.எஸ்ஸும் அந்த கட்சியில் இணைத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டு இருவரும் கட்சியை வழிநடத்தினர்.

"முற்றிய மோதல்....சூறையாடப்படும் அ.தி.மு.க தலைமை அலுவலகம்" 1

விளம்பரம்

இப்பொது இரட்டை தலைமை வேண்டாம் என முடிவெடுத்து கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமுறை விவகாரம் தலைதூக்கிய முதலே எடப்பாடி பெருமபான்மையுடன் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட சூழ்நிலைகள் உருவாக பன்னீர்செல்வம் தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடினர்.

"முற்றிய மோதல்....சூறையாடப்படும் அ.தி.மு.க தலைமை அலுவலகம்" 3

விளம்பரம்

இன்று காலை முதலே சென்னை வானகரம் அமைந்துள்ள அதிமுக அரங்கில் மிக பெரிய அளவில் தொண்டர்கள் கூட்டம் படைசூழ தற்காலிக பொது செயலாளராக எடப்பாடி.கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பொதுகுழு கூட்டம் நடத்த தடை விதிக்க கோரி, பன்னீர்செல்வம் சார்பில்  நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் நிராகரிக்க இன்று எடப்பாடி தரப்பு மிக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடையவை  மக்கள் நீதி மய்யத்தில் ரஜினியா? வாய்புகள் இல்லை கமல் திட்டவட்டம்!!

"முற்றிய மோதல்....சூறையாடப்படும் அ.தி.மு.க தலைமை அலுவலகம்" 5

விளம்பரம்

இதனால் செய்வது அறியாது நின்ற பன்னீர்செல்வம் தரப்பு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை  கைப்பற்றி உள்ளது. இதனைத் தடுக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். அந்த காட்சிகள் வெளியாகி மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

"முற்றிய மோதல்....சூறையாடப்படும் அ.தி.மு.க தலைமை அலுவலகம்" 7

விளம்பரம்

Video Courtesy – India Today

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment