எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆடிட்டர் வந்து சில தகவல்களை கூற வீட்டில் இருக்கும் அனைவரும் உடைந்து போய் அழுகின்றனர். குறிப்பாக கதிர், ஞானம், விசாலாட்சி மற்றும் கரிகாலன் ஆகியோர் உடைந்து போய் கண்கலங்கி அழுகின்றனர். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டில் தொடர்ந்து நடந்து வரும் பிரச்சினைகளால் கடிதம் எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் ஆதி குணசேகரன். தனது மனைவியின் நடத்தை சரியில்லை தனது பிள்ளைகளின் வளர்ப்பும் சரியில்லை என்று அவர் கடிதத்தில் குறித்து வைத்து விட்டு சென்றிருக்கிறார். தொடர்ந்து ஞானமும் கதிரும் ஆடிட்டருக்கு போன் செய்து கேட்க, குணசேகரன் சில தகவல்களை உங்களிடம் கூறுமாறு சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் என்று சொல்லி ஆடிட்டர் வீட்டிற்கு வந்து சில கோப்புகளை கொடுக்கிறார்.
இந்த கோப்புகளை பார்த்துவிட்டு ஞானம் உட்பட அனைவரும் அழுகின்றனர். அப்போது கரிகாலன், ஐயா நீ புரியாதவர்களுக்கு புதிர், உன்னை புரிந்து கொண்ட எனக்கு நீ உயிர் காதில் உன் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்று சொல்லி கண்கலங்கி அழுகிறார். அதைக் கேட்டு மற்றவர்களும் உடைந்து போய் அழுகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV