குணசேகரன் புகைப்படம் முன்பு கதறி அழும் ஒட்டுமொத்த குடும்பம்.! என்ன நடந்தது.?

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அந்த ப்ரோமோவில் லெட்டர் எழுதி வைத்துவிட்டு ஆதி குணசேகரன் வீட்டை விட்டு சென்று விட்டது போல காட்டப்படுகிறது. இதனால் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இன்னும் சிறிது நாளைக்கு காட்டப்படாது என்றே தெரிகிறது. மாரிமுத்துவின் இறப்புக்கு பின்னர் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை என்ன செய்யப் போகிறார்கள் என்பதே தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் கதாபாத்திரம் சில நாட்களுக்கு காட்டப்படாமல் இருப்பதற்காக அவர் லெட்டர் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியது போல காட்டப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குணசேகரன் புகைப்படம் முன்பு கதறி அழும் ஒட்டுமொத்த குடும்பம்.! என்ன நடந்தது.? 1

விளம்பரம்

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் சீரியலை பார்த்து வருகின்றனர். நேற்றைய கதைப்படி பைக் வாங்கி கொடுத்த ஈஸ்வரியையும் அவரது மகனையும் தற்போது ஞானம் கதிர் இருவரும் சேர்ந்து சரமாரியாக திட்டுகின்றனர். வீட்டில் சண்டை பெரிதாகிறது. ஈஸ்வரி தங்களுக்கு சுயமரியாதை இருக்கிறது் நாங்கள் முடிவெடுக்கும் நேரம் வந்துவிட்டது என்பது போல பேசி இருந்தார். இதனால் ஈஸ்வரி மற்றும் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அதிரடி திருப்பமாக ஆதி குணசேகரன் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

தொடர்புடையவை  விசித்ரா மேம் கிட்ட இருக்க கெத்து தான் அவங்களோட தனித்துவம்..! விசித்ராவை புகழ்ந்து பேசிய தினேஷ்.!

குணசேகரன் புகைப்படம் முன்பு கதறி அழும் ஒட்டுமொத்த குடும்பம்.! என்ன நடந்தது.? 3
தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆதி குணசேகரனை காணவில்லை என்று சொல்லி வீட்டில் இருக்கும் அனைவரும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஞானம் கையில் ஒரு கடிதத்துடன் மாரிமுத்துவின் புகைப்படத்திற்கு முன்னால் நின்று அழுது கொண்டிருக்கிறார். இதனால் அவர் லெட்டரை எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறி இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun Tv

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment