வார்த்தைகளால் ஈஸ்வரியை நோகடிக்கும் தர்ஷினி.! மனம் நொந்து போன ஈஸ்வரி.! ப்ரோமோ இதோ

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது தர்ஷினி தனது தந்தை குணசேகருடன் சேர்ந்து கொண்டு ஈஸ்வரியை வெளியே செல்லுமாறு கூறுகிறார். தனது மகள் தர்ஷினி தன் பக்கம் இருப்பதாக நினைத்துக் கொண்டு குணசேகரன் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஆனால் தர்ஷினி உண்மையிலேயே ஈஸ்வரிக்கு எதிராக இருக்கிறாரா? அல்லது நாடகம் நடத்துகிறாரா? என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வார்த்தைகளால் ஈஸ்வரியை நோகடிக்கும் தர்ஷினி.! மனம் நொந்து போன ஈஸ்வரி.! ப்ரோமோ இதோ 1

தனது மகள் தர்ஷினியை கடத்தி வைத்து விட்டு காணாமல் போனதாக நாடகம் ஆடி வந்த குணசேகரன் தற்போது அவரை மீட்டுக் கொண்டு வந்து விட்டதாக கூறுகிறார். இதற்கெல்லாம் காரணம் ஜீவானந்தமும் மனைவி ஈஸ்வரியும் தான் என்று சொல்லி வீட்டில் இருக்கும் அனைவரையும் நம்ப வைக்கிறார். தர்ஷினியை ஈஸ்வரி தாயார் சந்திக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில் ஈஸ்வரி இத்தனை நாளாக விலகியே இருந்தார். இந்த நிலையில் நேற்று அவர் தனது மகளை அறையில் சென்று சந்திக்கிறார். இதைப் பார்க்கும் குணசேகரன் ஈஸ்வரியை இனி சந்திக்கக் கூடாது என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்.


அப்போது கதிர் அவரது மகளை அவர் சென்று சந்திப்பதில் எந்த தவறும் இல்லை என பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் தர்ஷினியோ, நீ வெளியே போ என ஈஸ்வரியை பார்த்து கூறுகிறார். இதனால் ஈஸ்வரி அப்படியே உடைந்து போகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்