கதிர் இந்த வீட்டுக்கு பொணமா தான் வருவான்.! குணசேகரன் சொன்னதை கேட்டு கொதித்த நந்தினி.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கதிரை தான் அனுப்பி இருக்கும் இடத்தை யாரிடமும் கூறப்போவதில்லை என்றும் கதிர் உயிருடன் வந்தால் தான் வருவான் இல்லை என்றால் பிணமாக தான் வருவான் என்று குணசேகரன் பேசிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டு கடுப்பான நந்தினி தற்போது குணசேகரனிடம் சென்று பயங்கர சண்டை போடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பல லட்சம் மனங்களை வென்ற ஒரு நாடகம் என்று சொன்னால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். இந்த சீரியலில் தற்போது ஜீவானந்தம் யார்? அவருக்கும் அப்பத்தாவிற்கும் என்ன தொடர்பு? ஏன் குணசேகரனின் சொத்துக்களை ஜீவானந்தம் பறித்துக் கொண்டார் என்கிற எதிர்பார்ப்புடன் கதை நகர்ந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கதிர் இந்த வீட்டுக்கு பொணமா தான் வருவான்.! குணசேகரன் சொன்னதை கேட்டு கொதித்த நந்தினி.! 1

இந்த நிலையில் ஜீவானந்தத்தை தேடி தற்போது வளவன் மற்றும் கதிர் இருவரும் காரில் சென்று கொண்டிருக்கிறனர். அங்கு கதிர் குறித்த பல விஷயங்களை வளவன் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் கதிர். இதற்கிடையே ஜனனியும் ஜீவானந்தம் குறித்த தகவல் கிடைத்ததால் அவரும் கவுஞ்சி மலை கிராமத்திற்கு சென்று இருக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பரபரப்பு எழுந்திருக்கிறது. இதற்கிடையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஞானம் குணசேகரன் கரிகாலன் ஆகியோர் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கதிர் வீட்டிற்கு வீட்டிற்கு உயிருடன் வந்தால் தான் வருவான், அவன் பிணமாக கூட வரலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கோபமான நந்தினி வேகமாக எழுந்து குணசேகரிடம் சண்டை போடுகிறார்.

மேலும் கதிர் இப்போதே இங்கு வந்தாக வேண்டும் என்று நந்தினி குணசேகரன் சண்டை போடுகிறார். அதே சமயம் ஞானமும் என்என்ன பேசிக்கிட்டு் இருக்கீங்க என்று சொல்லி குணசேகரனிடம் கேட்க சண்டை முற்றுகிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்