குணசேகரன் வீட்டிற்கே வந்து பிரச்சனை செய்யும் வளவன்.! சமாளிக்க முடியாமல் கதறும் குணசேகரன்.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வளவன் குணசேகரன் வீட்டுக்கு வந்து கதிர் குணசேகரன் என அனைவருனும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீவானந்தத்தின் மனைவியை குணசேகரன் ஆட்களை அனுப்பி கொலை செய்து விடுகிறார். இதை ஜனனி வீட்டில் உள்ள மற்ற மருமகள்களிடம் கூற அனைவருக்கும் ஜீவானந்தம் மீது பரிவு ஏற்படுகிறது. அனைவரும் ஜீவானந்தத்தை நேரில் பார்ப்பதற்காக சென்று கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குணசேகரன் வீட்டிற்கே வந்து பிரச்சனை செய்யும் வளவன்.! சமாளிக்க முடியாமல் கதறும் குணசேகரன்.! 1

ஜனனி, ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி என நால்வரும் காரில் கிளம்பி ஜீவானந்தத்தை பார்ப்பதற்கு சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனனி ஜீவானந்தம் மீதும், அவர் குழந்தை மீதும் பரிவு வரும்படி யாரும் பேசி விடாதீர்கள், அது அவருக்கு பிடிக்காது. பின்னர் நாம் செல்லும் காரியமே கெட்டுவிடும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். நிலைமை ஒருபுறம் இப்படி இருக்க, மறுபுறம் வளவன் ஆதி குணசேகரன் வீட்டிற்கே வந்து விடுகிறார். அங்கு வந்து கதிர் மற்றும் குணசேகரிடம் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் என்னை தேடி வருவீர்கள், இல்லையென்றால் அப்படியே விட்டு விடுவீர்களா என்று கத்திக் கொண்டிருக்கிறார்.

அப்போது கதிருக்கும் வளவனுக்கும் வார்த்தை முற்றுகிறது. உள்ளே இருந்து யாருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று விசாலாட்சி கேட்கிறார். உடனே வளவனை குணசேகரன் சமாளிக்க முடியாமல் ஆஃப் செய்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

youtube video embed code credits: sun tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்