மயூவிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்ட பாக்யா.! போன் போட்டு நன்றி சொன்ன மயூ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோன் வெளியாகியிருக்கிறது. அதில் மயூ தற்போது பாக்கியலட்சுமிக்கு போன் செய்து ஏன் என்னை பார்க்க என் வீட்டிற்கு வரவில்லை என்று கேள்வி எழுப்புகிறார். அந்த நெகிழ்ச்சியான ப்ரோமாவை தற்போது விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பல பரபரப்பான கட்டங்கள் நடந்து வருகிறது. கோபியின் இரண்டாவது மனைவியின் மகளாக இருக்கும் மயூ தற்போது பருவமடைந்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மயூவிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்ட பாக்யா.! போன் போட்டு நன்றி சொன்ன மயூ 1

விளம்பரம்

இதற்காக கோபியின் தனது தாய் தந்தையை வீட்டிற்கு வந்து அழைக்கிறார். மயூவுக்கு அவரின் ஆசிர்வாதம் தேவை என்று அவர் அழைக்கிறார். ஆனால் ஈஸ்வரி தன்னால் வர முடியாது என்று சொல்லி கோபியை அனுப்பி வைத்து விடுகிறார். பின்னர் சமையலறைக்கு வரும் ஈஸ்வரி பாக்யாவிடம் இது குறித்து பேசுகிறார். அப்போது நாம் மயூவிற்காக இதை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். பின்னர் ஈஸ்வரியிடம் இனிப்புகளை கொடுத்து மயூவைப் பார்க்க அனுப்பி வைக்கிறார் பாக்யா.

தொடர்புடையவை  பிக்பாஸ்-ல் இருந்து வெளியேறிய பின்பு முதல் வீடியோவை வெளியிட்ட ராம்.! கேக் வெட்டி வரவேற்ற குடும்பத்தினர்.!

மயூவிடம் பெருந்தன்மையாக நடந்து கொண்ட பாக்யா.! போன் போட்டு நன்றி சொன்ன மயூ 3

விளம்பரம்

ராதிகாவின் வீட்டிற்கு செல்லும் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தியிடம் பாக்யா ஆன்ட்டி ஏன் வரவில்லை என்று மயூ கேள்வி எழுப்புகிறார். மேலும் பாக்யாவுக்கு போன் செய்து நீங்கள் செய்து கொடுத்த இனிப்புகள் எல்லாம் நன்றாக இருக்கிறது ஏன் என்னை பார்க்க வரவில்லை? என்று கேட்கிறார் அதற்கு பாக்யா நீ நன்றாக இருக்க வேண்டும் மயூ என்று மட்டும் கூறுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment