சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சலில் நடிக்கும் நடிகர்கள் பலரும் தற்போது விழா ஒன்றில் ஒன்றாக இணைந்திருக்கின்றனர்.

இந்த சீரியலில் ஞானசேகரன் ஆக நடித்து வரும் கமலேஷ் வீட்டில் நடந்த விழாவில் தற்போது அனைவரும் ஒன்றாக இணைந்திருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரை உலகில் மகத்தான சாதனை படைத்த ஒரு சீரியலாக இருந்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல். இந்த சீரியலுக்கு என்று தமிழ் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருந்து வருகிறது.
ஆதி குணசேகரன், ஞானசேகரன், கதிர் மற்றும் சக்தி என நான்கு அண்ணன் தம்பிகள் இருக்கிறார்கள். ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட இவர்களுக்கு ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி மற்றும் ஜனனி என மருமகள்கள் வருகிறார்கள்.
பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இந்த ஆண்களிடையே இந்த நான்கு மருமகள்களும் எப்படி புரட்சிகரமாக மாறுகிறார்கள் என்பது குறித்த கதையாக இது நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஆதி குணசேகரன் ஆக நடிகர் மாரிமுத்து, ஞானசேகரனாக நடிகர் கமலேஷ், கதிராக நடிகர் விபுராமன், சக்தியாக சபரி பிரசாந்த் ஆகியோர் இந்த நாடகத்தில் நடித்து வருகின்றனர்.
மேலும் ஈஸ்வரியாக நடிகை கனிகா, ரேணுகாவாக பிரியதர்ஷினி, நந்தினி ஆக ஹரிப்பிரியா, ஜனனியாக மதுமிதாவும் நடித்து வருகின்றனர்.
மேலும் இவர்களுடன் இணைந்து விசாலாட்சியாக சத்யப்பிரியா, அப்பத்தாவாக பாம்பே ஞானம், ஜான்சி ராணியாக நடிகை காயத்ரி, கரிகாலனாக விமல் போன்ற பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த கதை விறுவிறுப்பை அதிகமாக்கி இருக்கிறது.
தற்போது ஆதி குணசேகரனின் 40% பங்குகளை ஜீவானந்தம் எடுத்துக் கொள்கிறார். அது எப்படி நடந்தது? யார் இந்த ஜீவானந்தம் என்று கதை விறுவிறுப்புடன் நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர்கள் அனைவரும் இணைந்து இருப்பது போல ஒரு புகைப்படம் வெளியானது.
அதில் ஞானசேகரன் மகள் தியாவிற்கு நான்காவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. அதற்காக எதிர்நீச்சல் குழுவினர் ஒட்டுமொத்த பேரும் அந்த பிறந்தநாள் பார்ட்டியில் பங்கெடுத்திருக்கின்றனர்.
அந்தப் புகைப்படங்களை பார்த்த பலரும் சீரியலில் தான் எல்லாரும் இப்படி அடித்துக் கொள்கிறார்கள். நேரில் அனைவரும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று பகிர்ந்து வருகின்றனர்.