தாலியை அறுத்து எறிந்த ஆதிரை..! ஜான்சி ராணி கன்னத்தில் அறைந்து வெளியில் தள்ளிய ஈஸ்வரி

வெளியிட்டது

‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் ஜான்சி ராணி கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடும் ஈஸ்வரி, அவரை வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் பல அதிரடியான திருப்பங்களுடன் நடந்து வருகிறது. தற்போது கதைப்படி ஜீவானந்தம் தான் அப்பத்தாவை கொலை செய்தார் என்று ஆதி குணசேகரன் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை நீதிபதி விசாரிக்க மறுத்துவிட்டார். இது குணசேகரன் சொன்னதை அப்படியே எழுதி வைத்திருப்பது போல இருப்பதாக கூறிய நீதிபதி மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தாலியை அறுத்து எறிந்த ஆதிரை..! ஜான்சி ராணி கன்னத்தில் அறைந்து வெளியில் தள்ளிய ஈஸ்வரி 1
இந்த நிலையில் குணசேகரனுக்கு எதிராக ஆஜராக சாருபாலாவை வழக்கறிஞராக நியமித்திருக்கிறார் ஜனனி. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சாருபாலா போலீஸ் ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் அங்கு வருகின்றனர். “இந்த அம்மாவுக்கு இங்க என்ன வேலை.?” என்று குணசேகரன் கேட்கிறார். அதற்கு இது போலீஸ் ஸ்டேஷன் யார் வேண்டுமானாலும் வரலாம் என்று சாருபாலா பதிலளிக்கிறார். இதுவரை குணசேகரனுக்கு சாருபாலாதான் தனக்கு எதிராக வாதாட போகிறார் என்கிற விஷயமே தெரியாது. நிலைமை இப்படி இருக்க வீட்டில் நிலைமை வேறு விதமாக இருக்கிறது.


வீட்டில் நடந்த பிரச்சனையில் ஆதிரை தாலியை கழட்டி தூக்கி எறிகிறார். இதனால் கடுப்பான ஜான்சி ராணி ஆதிரை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார். இதைப பார்த்த ஈஸ்வரி கோபத்தில் ஜான்சி ராணியை அடித்து துவைக்கிறார். அந்த அதிரடியான புரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்