செழியன் பெரியப்பா என அழைத்த நிலா பாப்பா.! தூக்கி வைத்து கொஞ்சிய செழியன்.! செம்ம அழகு.!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் செழியன் நிலா பாப்பாவை தூக்கிவைத்து விளையாடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதை பார்த்த பாக்கியாலட்சுமி சீரியலின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாக்கியலட்சுமி சீரியலில் எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அமிர்தா கைக் குழந்தையுடன் இருக்கும் ஒரு கைம்பெண் ஆவார். திருமணம் ஆன சில வருடங்களிலேயே ஒரு விபத்தில் கணவரை இழந்த அவர், தனது கைக்குழந்தையுடன் மாமனார் மாமியாருடன் வசித்து வருகிறார். அப்போது ஒரு குறும்படத்திற்காக எதிர்பாராத விதமாக எழிலை சந்திக்கும் அவருக்கு, எழிலுடன் காதல் ஏற்படுகிறது. இத்தனை நாள் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்தார் எழில். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செழியன் பெரியப்பா என அழைத்த நிலா பாப்பா.! தூக்கி வைத்து கொஞ்சிய செழியன்.! செம்ம அழகு.! 1

விளம்பரம்

 

ஆனால் ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்த விஷயம் தெரிய வர எழிலுக்கு அவசர அவசரமாக வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கட்டாய கல்யாணத்தால் தனது வாழ்க்கை சீரழிந்தது போல தன்னுடைய மகன் வாழ்க்கையையும் சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக பாக்யா இந்த அவசர திருமணத்தை உடனடியாக நிறுத்தினார். பின்னர் எழில் இத்தனை ஆண்டுகளாக காதலித்து வந்த அமிர்தாவையே அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். திருமணம் செய்த பின்பு தனது குழந்தையுடன் பாக்யா வீட்டில் வசித்து வருகிறார் அமிர்தா. இந்த திருமணத்தை கோபி, செழியன் மற்றும் ஈஸ்வரி பாட்டி ஆகிய மூவரும் ஏற்கவில்லை. அவர்களுக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பமில்லை. இருந்தபோதிலும் வேறு வழியில்லாமல் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் வீட்டில் இருக்கும் நிலா பாப்பா, ஈஸ்வரி பாட்டி மற்றும் செழியனை கொஞ்சி விளையாடுகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  அச்சச்சோ என்னாச்சு.? பேச்சு மூச்சு இல்லாமல் கிடைக்கும் ஈஸ்வரி.! ப்ரோமோ இதோ

செழியன் பெரியப்பா என அழைத்த நிலா பாப்பா.! தூக்கி வைத்து கொஞ்சிய செழியன்.! செம்ம அழகு.! 3
ஹாலில் அமர்ந்து போன் பேசிக்கொண்டிருந்த செழியனிடம் வரும் நிலா பாப்பா, பெரியப்பா பெரியப்பா என்று கூப்பிடுகிறது. மேலும் விளையாடலாமா என்று கேட்கிறது. செழியனும் மனம் இறங்கி அந்த குழந்தையுடன் விளையாட தொடங்குகிறார். செழியன் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி நிலா பாப்பாவை ஏற்றுக்கொள்வர் என்று தெரிகிறது. அந்த அழகான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Vijay Television 

விளம்பரம்

Leave a Comment