கதிரை நடுரோட்டில் வைத்து அடித்து துவைத்த ரவுடிகள்.! கதிருக்காக பதறி ஓடும் நந்தினி.!

வெளியிட்டது

‘எதிர்நீச்சல்’ சீரியலின் நாளைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் கதிரை ரவுடிகள் சிலர் அடித்து துவைத்துக் கொண்டிருக்கும் நிலையில், கதிருக்காக நந்தினியும் அவரது மகள் தாராவும் ஓடிச் சென்று கொண்டிருக்கின்றனர் இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் இனியாவது நந்தினியை கதிர் புரிந்து கொண்டு திருந்தி வாழ வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு காலத்தில் சின்னத்திரை உலகிலேயே டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருந்த ‘எதிர்நீச்சல்’ சீரியல் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் பின் தங்கி சென்று கொண்டிருக்கிறது. மாரிமுத்துவின் இறப்பிற்கு பின்னர் மாற்றப்பட்ட கதைக்களம் பல ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கதிரை நடுரோட்டில் வைத்து அடித்து துவைத்த ரவுடிகள்.! கதிருக்காக பதறி ஓடும் நந்தினி.! 1
குறிப்பாக பெண்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்துவது, வில்லன்கள் கையே எப்பொழுதும் ஓங்கிக் கொண்டிருப்பது போன்ற காரணங்களால் ரசிகர்களுக்கு இந்த சீரியலில் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இந்த சீரியல் கதையை இயக்குனர் மாற்றுவதாக தெரியவில்லை. இருப்பினும் தொடர்ந்து சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது கதைப் படி ஜனனிக்கு புது வில்லனாக கிருஷ்ணசாமி மெய்யப்பன் என்கிற வில்லனை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர். கதைக்களம் இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நந்தினி தனது தந்தையிடம், “இனி இந்த வீட்டைப் பற்றி யோசிக்காமல் என்னைப் பற்றியும்_ என் மகள் தாராவை பற்றியும் யோசிக்க போகிறேன்” என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

மறுபுறம் ரவுடிகள் சிலர் சேர்ந்து கதிரை அடித்து துவைக்கின்றனர். இதை பார்க்கும் நந்தினியும் தாராவும் உடனடியாக ஓடி செல்கின்றனர். அவர்களிடமிருந்து நந்தினி கதிரை காப்பாற்றுவார் என்று தெரிகிறது. இனியாவது நந்தினியை புரிந்து கொண்டு கதிர் வாழ வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்