விரைவில் முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா.?? வெளியான ப்ரோமோவால் குழப்பத்தில் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மாவின் இன்றைய ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், இந்த நாடகம் முடியப்போகிறதோ என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 5 வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் பாரதி கண்ணம்மா. இதில் ஹீரோவாக அருண் பிரசாத்தும், ஹீரோயினாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிகை வினுஷா தேவியும் நடித்து வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த கதையை கருப்பாக இருக்கும் மருமகளை ஏற்றுக் கொள்ளாத மாமியார் என்றுதான் ஆரம்பித்தனர். ஆனால் ஐந்து ஆண்டுகளில் சுற்றி சுற்றி கதை எங்கெங்கயோ போய்விட்டது. தான் சொல்ல வந்த கருத்தை சொல்லாமல் கதையை எங்கெங்கோ திருப்பி, புதிய புதிய கதாபாத்திரங்களை இணைத்ததால் இந்த நாடகத்தை பலரும் பார்ப்பதையே நிறுத்திவிட்டனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

விரைவில் முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா.?? வெளியான ப்ரோமோவால் குழப்பத்தில் ரசிகர்கள் 1

விளம்பரம்

மேலும் ப்ரோமோக்கள் வெளியாகும் போது கீழே கமெண்ட்களும் ட்ரோல்ஸ்களும் பறக்கின்றன. கடந்த இரண்டு வாரங்களாக தீவிரவாதிகள் பாரதியின் மருத்துவமனையை கைப்பற்றி ஹைஜேக் செய்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் தான் மருத்துவமனையை விடுவேன் என்பது போல் காட்டப்பட்டு வந்தது. இது மிகப்பெரிய சலிப்பை பார்க்கும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. மேலும் டிஆர்பி ரேட்டிங்களும் பலத்த அடி வாங்கி வருகிறது பாரதி கண்ணம்மா. பலரும் இந்த நாடகத்தை முடித்து சுபம் போடுங்கள் என்று கமெண்டில் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் இயக்குனர் விடாப்பிடியாத கதையை ஜவ்வாக இழுத்து வருகிறார். பார்ப்பதற்கு சில சமயங்களில் எரிச்சல் ஊட்டும் வகையில் வசனங்களும், கதையின் நகரும் அமைந்திருக்கிறது.

தொடர்புடையவை  மாமியாருக்காக பெரிய டிவி வாங்கி பரிசளித்த பிக்பாஸ் தாமரை.! டிவி ரொம்ப நல்லா இருக்கு தாமரை.!

விரைவில் முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா.?? வெளியான ப்ரோமோவால் குழப்பத்தில் ரசிகர்கள் 3 விரைவில் முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா.?? வெளியான ப்ரோமோவால் குழப்பத்தில் ரசிகர்கள் 5

விளம்பரம்

விரைவில் முடிவுக்கு வரும் பாரதி கண்ணம்மா.?? வெளியான ப்ரோமோவால் குழப்பத்தில் ரசிகர்கள் 7

ஒரு வழியாக தீவிரவாதிகள் பலரையும் சுட்டு வீழ்த்தி இருக்கிறார் பாரதி. ஆனால் எதிர்பாரத திருப்புமாக பாரதியின் உடலில் வெடிகுண்டை கட்டி பாரதியை ஒரு அறையில் கட்டி வைத்து விடுகின்றனர். போலீசார் வந்து மற்ற அனைவரையும் காப்பாற்றி விடுகின்றனர் ஆனால் பாரதியை மட்டும் காணவில்லை. இதனால் கண்ணம்மா மருத்துவமனைக்குள் நுழைந்து பாரதியை தேடுகிறார். அப்போது பாரதியை நீ போய்விடு கண்ணம்மா என் உடலில் வெடிகுண்டு இருக்கிறது என்று கதறி அழுகிறார். ஆனால் கண்ணம்மா பாரதியை கட்டிப் பிடித்துக் கொண்டு நான் உங்களை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் இருவரும் சேர்ந்து இறந்து விடுவோம் என்று கூறுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் இந்த பார்த்தால் சீரியஸாக இல்லை சிரிப்புதான் வருகிறது என்று கமெண்டில் கழுவி ஊற்றி வருகின்றனர். அந்த ப்ரோமோவை நீங்களும் பாருங்கள்.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment