‘எதிர்நீச்சல்’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது நந்தினியை வார்த்தைகளால் விசாலாட்சி மிகவும் காயப்படுத்துகிறார். விசாலாட்சி பேசும் பொழுது, “கதிர் இறந்து விட்டால் இன்னொருத்தனை கட்டிக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பாள்” என்று சொல்லி மிகவும் மோசமான வார்த்தைகளை பேசுகிறார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத நந்தினி கதறி அழுது கொண்டிருக்கிறார். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கதிர், தாரா மற்றும் நந்தினியின் முகத்தை கூட பார்க்க விரும்பாமல் முகத்தை திருப்பிக் கொள்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்போதைக்கு கதிர் திருந்துவது போல தெரியவில்லை என்று கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘எதிர்நீச்சல்’ சீரியலில் குணசேகரனின் இரண்டாவது தம்பியாக இருக்கும் கதிரை ரௌடிகள் சிலர் சேர்ந்து அடித்து துவைத்து விடுகின்றனர். இதை பார்க்கும் கதிரின் மனைவி நந்தினி கதிரை மருத்துவமனையில் அனுமதிக்கிறார். ஆனால் கதிரின் இந்த நிலைமைக்கு காரணம் நந்தினி தான் என்று சொல்லி கதிரின் தாயார் விசாலாட்சியும், கதிரின் அண்ணன் ஞானமும் அவர் மீது அபாண்டமாக பழி சுமத்துகின்றனர். தற்போது கதிர் கண் விழித்து இருக்கிறார். இந்த நிலையில் நின்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நந்தினி அழுது கொண்டே வெளியே நின்று கொண்டிருக்கிறார். அப்போது விசாலாட்சி, “கதிர் இறந்து விட்டால் வேறு எவனையாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்று இவள் நினைத்து இருப்பாள்” என்று கூற நந்தினி கோபத்தில் கத்துகிறார்.
தொடர்ந்து கதிரை பார்ப்பதற்காக செல்லும் தாரா மற்றும் நந்தினியின் முகத்தில் கதிர் முழிக்க விரும்பாமல் முகத்தை திரும்பிக் கொள்கிறார். அப்போது தாரா அழுது கொண்டே அப்பா என்னை பார்க்க கூட மாட்டிக்கிறார் என்று சொல்லி அழுகிறார். அதைக் கேட்கும் நந்தினி, “நீ பெத்த புள்ள தானய்யா ஏன் இப்படி பண்ற” என்று கோபத்தில் திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV