‘எதிர்நீச்சல்’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் கதிரை ரவுடிகள் சிலர் அடித்து துவைத்த நிலையில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்காக நந்தினி கண்ணீருடன் காத்துக் கிடக்கிறார். அப்போது விசாலாட்சியும், ஞானமும் நந்தினியை தாக்கும் விதமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நந்தினி தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். ஒரு காலத்தில் சின்னத்திரை உலகிலேயே டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருந்த ‘எதிர்நீச்சல்’ சீரியல் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் பின் தங்கி சென்று கொண்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
![]()
மாரிமுத்துவின் இறப்பிற்கு பின்னர் மாற்றப்பட்ட கதைக்களம் பல ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை என்பதை டிஆர்பி ரேட்டிங்கில் வாங்கிய அடி காட்டுகிறது. கதைக்களம் இப்படியாக நகர்ந்து கொண்டிருக்க, ரவுடிகள் சிலர் சேர்ந்து கதிரை அடித்து துவைக்கின்றனர். இதை பார்க்கும் நந்தினியும் தாராவும் உடனடியாக ஓடி செல்கின்றனர். அவர்களிடமிருந்து நந்தினி கதிரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அப்போது அங்கு வரும் ஞானமும், விசாலாட்சியும் நந்தினையை குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நர்ஸ் வந்து நந்தினியிடம் கையெழுத்து கேட்கிறார்.
அப்போது நந்தினி, விசாலாட்சி மற்றும் ஞானத்தைப் பார்த்து, “ரத்த சொந்தம் என சொல்லிக் கொள்வீர்களே? நீங்கள் கையெழுத்துப் போடுங்கள், செல்லுதான்னு பாப்போம் எனக் கூற, பதில் பேச முடியாமல் ஞானமும், விசாலாட்சியும் முழிக்கின்றனர். இந்த ப்ரோமோவைப் பார்த்த பலரும் இனியாவது நந்தினியை புரிந்து கொண்டு கதிர் வாழ வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: SUN TV