ரஜினியின் 73வது பிறந்தநாளில் ‘தலைவர் 170’ படத்தின் டைட்டிலை அறிவித்த படக்குழு..! வீடியோ உள்ளே..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் மற்றும் பிறந்தநாள் டீசரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி இன்று இந்த படத்தின் அப்டேட் வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது படக்குழுவினர் டீசர் மற்றும் டைட்டிலை வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகம் மட்டும் அல்லாமல் தென்னிந்திய திரை உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் சுமார் ரூ.600 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து மாபெரும் சாதனை படைத்திருந்தது. ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் ரஜினி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ரஜினியின் 73வது பிறந்தநாளில் 'தலைவர் 170' படத்தின் டைட்டிலை அறிவித்த படக்குழு..! வீடியோ உள்ளே..! 1

விளம்பரம்

தொடர்ந்து ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம்  தயாரித்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாமல் ‘தலைவர் 170’ என்கிற பெயரிலேயே படம் அழைக்கப்பட்டு வருகிறது. இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஷூட்டிங் பணிகள் தொடங்கி சில காலம் ஆன பின்பும் டைட்டிலை வெளியிடாமல் படக்குழுவினர் அமைதி காத்து வந்தனர். இந்த நிலையில் இன்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு டைட்டில்  அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையவை  பொன்னியின் செல்வனுக்காக தேசிய விருது..! மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட இயக்குனர் Manirathnam...!

ரஜினியின் 73வது பிறந்தநாளில் 'தலைவர் 170' படத்தின் டைட்டிலை அறிவித்த படக்குழு..! வீடியோ உள்ளே..! 3

விளம்பரம்

லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் நேற்று வெளியிட்டு இருந்த அறிவிப்பில், “ரஜினியின் 73வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ‘தலைவர் 170’ படத்தின் தலைப்பையும், பிறந்தநாள் டீசர் ஒன்றும் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும்” என அறிவித்து இருந்தனர். அதேபோல தற்போது மாஸாக டைட்டிலை அறிவித்துள்ளனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Lyca Productions

விளம்பரம்

Leave a Comment