தர்ஷினியை கரிகாலனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தாரா குணசேகரன்.??

வெளியிட்டது

தமிழ் சின்னத் திரையில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இன்றைக்கான எபிசோடு அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கின்றது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை யூகிக்கவே முடியாத அளவிற்கு பரபரப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது ‘எதிர்நீச்சல்’ சீரியல். அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஞானம் ஆதிரையை எஸ்கேஆர் வீட்டிலிருந்து இழுத்து வர முயற்சி செய்கிறார். அப்போது அந்த வழியாக சென்ற போலீஸ் அங்கு வந்து என்ன பிரச்சனை? என்று கேட்க ஆதிரை இவர்களுடன் எனக்கு செல்ல விருப்பமில்லை என்று கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தர்ஷினியை கரிகாலனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தாரா குணசேகரன்.?? 1

அந்த சமயம் அங்கு வரும் நீதிபதி இங்கு என்ன சத்தம்? என்று கேட்டு அவர்களின் வீட்டிற்குள் நுழைகிறார். அப்போது ஆதிரை நடந்த அனைத்தையும் கூறி தனக்கு குணசேகரனுன் போக விருப்பம் இல்லை என்று கூறுகிறார். இதனால் நீதிபதி ஆதிரையை எஸ்கேஆர் வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு கிளம்புகிறார். எனவே ஆதிரை எஸ்கேஆர் வீட்டிலேயே தங்கி விடுகிறார். இதனால் மனம் உடைந்து வீட்டிற்கு வரும் குணசேகரன் அங்கு நடந்தவை எல்லாம் கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜான்சி ராணி கரிகாலனை அழைத்துக் கொண்டு தனக்கு நீதி வேண்டும் என்று சொல்லி வெளியில் கிளம்புகிறார். அப்போது குணசேகரன் ஜான்சிராணியிடம் வந்து சில தகவல்களை கூறுகிறார். அதை கேட்கும் ஈஸ்வரி உள்ளிட்ட அனைவரும் ஆடிப் போய் நிற்கின்றனர்.


இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தர்ஷினி, ஜனனி மற்றும் ஈஸ்வரியிடம், “எப்பொழுதும் அவர்தான் ஜெயித்துக் கொண்டிருக்கிறார் அவர் கையே ஓங்குகிறது” என்று கூறிக் கொண்டிருக்கிறார். எனவே தர்ஷினியை கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்க குணசேகரன் முடிவெடுத்து விட்டாரோ? என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்திருக்கிறது. ‘எதிர்நீச்சல் சீரியல் போகும் போக்கு சரி இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்