மீண்டும் தந்தையான நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.! முதல் முறையாக மகனை காண்பித்த கணேஷ்.!

தமிழ் சின்னத்திரையில் பிரபல ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிஷா தம்பதிகள் முதல் முறையாக தங்களது இரண்டாவது குழந்தையின் முகத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கின்றனர். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. அபியும் நானும் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன்.

மீண்டும் தந்தையான நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.! முதல் முறையாக மகனை காண்பித்த கணேஷ்.! 1

விளம்பரம்

அதன் பின்னர் இவருக்கு சரியான பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத காரணத்தால் இவர் பிக் பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் மக்களின் வரவேற்பு பெரிய அளவில் கிடைக்காத காரணத்தால் இவரை பிக்பாஸில் இருந்து பாதியிலேயே வெளியேற்றி இருந்தனர்.

மீண்டும் தந்தையான நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.! முதல் முறையாக மகனை காண்பித்த கணேஷ்.! 3
வெளியே வந்த பின்னர் தமிழில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘இவன் வேற மாதிரி’, ‘தனி ஒருவன்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். இவருக்கும் சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளியுமான நிஷாவிற்கு 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

விளம்பரம்
தொடர்புடையவை  தலைகீழாக மாறும் வாக்குகள்.! முன்னேறி செல்லும் மாயா.! பூர்ணிமாவுக்கு எந்த இடம் தெரியுமா.?

மீண்டும் தந்தையான நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.! முதல் முறையாக மகனை காண்பித்த கணேஷ்.! 5

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள் – கல்லூரியின் கதை’ சீரியலில் நடித்து பிரபலமானவர் நிஷா் இவர் கணேஷ் வெங்கட்ராமனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார் நிஷா.

விளம்பரம்

மீண்டும் தந்தையான நடிகர் கணேஷ் வெங்கட்ராமன்.! முதல் முறையாக மகனை காண்பித்த கணேஷ்.! 7
இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு மகன் பிறந்திருந்த செய்தியை அவர்கள் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்திருந்தனர். தற்போது தனது மகனின் முகத்தை முதல் முறையாக ரசிகர்களுக்கு காட்டியிருக்கிறார் கணேஷ் – நிஷா தம்பதிகள். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. பலரும் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிஷா தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Ganesh VenkatRam (@talk2ganesh)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment