விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது கால் தவறி ராதிகா கீழே தடுக்கி விழுகிறார். ஆனால் அவரை ஈஸ்வரி தான் தள்ளிவிட்டார் என்று ராதிகா குற்றம் சாட்டுகிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராதிகாவை பரிசோதிக்கும் மருத்துவர்கள் ராதிகாவின் வயிற்றில் வளரும் கரு கலைந்து விட்டதாக கூறுகிறார். இதனால் கோபமடையும் கோபி ஈஸ்வரியிடம் சண்டை போடுகிறார். ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவின் வயிற்றில் வளரும் குழந்தையை ஈஸ்வரி கலைக்குமாறு கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் ராதிகா அந்த வேலையை செய்யவில்லை. எனவே ராதிகாவிற்கும் ஈஸ்வரிக்கும் தொடர்ந்து சண்டை வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் ராதிகா தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருக்கிறார். அப்போது கால் இடறி கீழே விழுகிறார். பின்னால் இருந்த ஈஸ்வரி அவரை சென்று தூக்குகிறார் ஆனால் ஈஸ்வரி தான் தன்னை தள்ளிவிட்டதாக ராதிகா நினைத்துக் கொள்கிறார்.

மருத்துவமனையில் ராதிகா அனுமதிக்கப்பட்ட நிலையில் வயிற்றில் வளரும் குழந்தை கலைந்து விட்டதாக மருத்துவர் கூறுகிறார். இதற்கு ஈஸ்வரி தான் காரணம் என ராதிகா அழுகிறார். தொடர்ந்து கோபி, ஈஸ்வரியிடம் சென்று சண்டை போடுகிறார். இதனால் அங்கிருந்து வெளியேறும் ஈஸ்வரி பாக்கியாவின் வீட்டில் சென்று தஞ்சம் அடைகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television