பழனிசாமி – பாக்கியா திருமண ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் கோபி.! வெடித்த சண்டை.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாக இருக்கிறது. அதில் தற்போது பாக்கியலட்சுமியை பழனிச்சாமியின் குடும்பத்தினர் பெண் கேட்டு வீட்டிற்கு வருகின்றனர். இந்த செய்தியை தெரிந்து கொண்ட கோபி, பாக்கியாவிடம் கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார். கோபியின் அநாகரிகமான பேச்சைக் கேட்ட பாக்யா கோபமடைந்து, அவரை சகட்டுமேனிக்கு திட்டுகிறார் அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பழனிசாமி - பாக்கியா திருமண ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் கோபி.! வெடித்த சண்டை.! 1

விளம்பரம்

பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி, பாக்யாவிற்கு இன்னொரு திருமணம் நடந்து விடக்கூடாது என்கிற முனைப்பில் இருக்கிறார். இந்த நிலையில் இனியாவின் பிறந்த நாளிற்காக பழனிச்சாமியின் தாயாரும் சகோதரியும் பாக்யா வீட்டிற்கு வருகை தருகின்றனர். அப்போது பழனிச்சாமியை பாக்யாவிற்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்து வரும் விஷயத்தை கோபியிடம் பழனிச்சாமியின் சகோதரி கூறுகிறார். இதைக் கேட்கும் கோபி அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

பழனிசாமி - பாக்கியா திருமண ஏற்பாடுகள் குறித்து அறிந்து கொள்ளும் கோபி.! வெடித்த சண்டை.! 3

விளம்பரம்

மேலும் பாக்யாவிடம் சென்று, “உனக்கும் பழனிச்சாமிக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை நடத்தி வருகின்றனர். நீயெல்லாம் ஒரு அம்மாவா?” என்று கோபத்துடன் கேட்கிறார். இதனால் கோபமடைந்த பாக்யா கோபியின் வாயை மூடுமாறு கோபத்தில் பத்திரகாளியாக மாறி கத்துகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television 

விளம்பரம்

Leave a Comment