காதலனை வீட்டிற்கு அழைத்து வந்து அதிர்ச்சி கொடுத்த தர்ஷினி.! ரகளை செய்யும் கரிகாலன்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தான் ஒருவரை காதலிப்பதாக தர்ஷினி குணசேகரிடம் கூறிக் கொண்டிருக்க, அவர் கோபத்தில் தர்ஷினியை திட்டுகிறார். இதற்கிடையே சரக்கு அடித்துக் கொண்டு வீட்டிற்கு வரும் கரிகாலன் நடு வீட்டில் ரகளை செய்து கொண்டிருக்கிறார் அவருக்கு என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் குணசேகரனும், ஞானமும் முழித்துக் கொண்டிருக்கின்றனர். ‘எதிர்நீச்சல்’ சீரியல் கதை போகும் போக்கு ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நன்றாக சென்று கொண்டிருந்த சீரியல் தற்போது திசை மாறி சென்று கொண்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காதலனை வீட்டிற்கு அழைத்து வந்து அதிர்ச்சி கொடுத்த தர்ஷினி.! ரகளை செய்யும் கரிகாலன்.! 1

 

ஆதிரைக்கும், கரிகாலனுக்கும் நடுரோட்டில் வைத்து திருமணம் செய்து வைத்திருந்தார் குணசேகரன். ஆனால் இந்த திருமணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லி ஆதிரை தாலியை கழட்டி எறிந்து விட்டு தற்போது காதலித்து வந்த அருணின் வீட்டில் சென்று தஞ்சம் அடைந்து இருக்கிறார். இந்த நிலையில் கரிகாலன் தனக்கு மனைவி வேண்டும் என்று சொல்லி ரகளையில் ஈடுபடுகிறார். அவருக்கு தன் மகள் தர்ஷினியை இரண்டாவதாக திருமணம் செய்து வைக்கிறேன் என்று குணசேகரன் வாக்கு கொடுக்கிறார். இது வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்கவில்லை. இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குணசேகரன் தர்ஷினியை பார்த்து “முளைத்து மூணு இலை விடல, உனக்கு லவ் கேக்குதா? என திட்டிக் கொண்டிருக்கிறார்.


அப்போது ஜனனி குறுக்கிட்டு “முளைத்து மூணு இலை விடாத புள்ளைக்கு தான் நீங்கள் திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறீர்கள்’ என்று பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது சரக்கு அடித்து விட்டு வீட்டிற்கு வரும் கரிகாலன் நடு வீட்டில் ரகளை செய்து கொண்டிருக்கிறார். தன்னுடைய நெஞ்சமெல்லாம் புண்ணாகி விட்டதாக அவர் அழுது புலம்புகிறார். இதைக் கேட்ட குணசேகரன் கரிகாலனுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்