தமிழின் பிறந்த நாளில் தனது காதலை வெளிப்படையாக சொன்ன மேகனா.! அதிர்ச்சியில் சரஸ்வதி.!

‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தமிழின் பிறந்தநாளுக்கு மிகப் பிரம்மாண்டமாக பார்ட்டி ஒன்றை மேகனா ஏற்பாடு செய்திருக்கிறார். மேலும் தமிழுக்காக மிக உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கி அவர் பரிசளிக்கிறார். இதை பார்க்கும் சரஸ்வதி மேகனாவை பார்த்து பொறாமைப் படுகிறார். அவருக்கு மேகனா மீது சந்தேகமும் வருகிறது. மேகனாவின் இந்த செயல்களை வசு மற்றும் சரஸ்வதி இருவருமே விரும்பவில்லை. கேட்கை வெட்டி முதலில் மேகனாவிற்கு தமிழ் ஊட்டுகிறார். இதனால் வசு மற்றும் சரஸ்வதி இருவரும் இங்கு ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்கின்றனர். பின்னர் மேகனா தமிழிடம் சென்று தனது காதலை வெளிப்படுத்துகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழின் பிறந்த நாளில் தனது காதலை வெளிப்படையாக சொன்ன மேகனா.! அதிர்ச்சியில் சரஸ்வதி.! 1
‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில் தமிழுக்கு தொழில் ரீதியாக மேக்னாவுடன் நட்பு கிடைக்கிறது. ஆனால் தமிழ் திருமணம் ஆனவர் என்பதை மேகனா இன்னும் அறிந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் மேகனா தமிழ் மீது காதல் வசப்படுகிறார். இது யாருக்குமே இதுவரை தெரியாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழின் பிறந்த நாளிற்கு மேகனா மிகப்பெரிய பாட்டி ஒன்றை ஏற்பாடு செய்கிறார். அந்த பார்ட்டிக்கு தமிழின் குடும்பம் அனைவருமே வருகை தருகின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கேக்கை வெட்டி முதலில் தமிழ் மேகனாவிற்கு ஊட்டி விடுகிறார். இதை பார்க்கும் வசு மற்றும் சரஸ்வதி இருவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். அவர்களுக்கு தமிழின் இந்த செயல் பிடிக்கவில்லை என்பது தெரிகிறது. தொடர்ந்து மேகனா தமிழுக்கு உயர் ரக கார் ஒன்றை பரிசளிக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  அடேய் என்ன பாத்ரூம் போக விடுங்க டா.! நித்யானந்தாவாக மாறி செம்ம காமெடி செய்யும் ஏடிகே.!

தமிழின் பிறந்த நாளில் தனது காதலை வெளிப்படையாக சொன்ன மேகனா.! அதிர்ச்சியில் சரஸ்வதி.! 3
அப்போது மேகனாவின் வீட்டு பணி பெண்ணாக இருக்கும் நபர் மேகனாவிடம், தமிழிடம் சென்று காதலை கூறுமாறு மேகனாவை அறிவுறுத்துகிறார். மேகனாவும் தமிழும் தனது காதலை தெரிவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது தமிழாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.்திரும்பி நின்று கொண்டிருப்பதால் அது யாராக இருக்கும்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment