சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் தற்போது கில்லி படத்தில் விஜயின் அம்மாவாக நடித்த நடிகை டி.கே கலா புதிய வரவாக என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது சீரியல் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். ஏற்கனவே இருக்கும் கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்த முடியாமல் தவித்து வரும் சீரியலில் எதற்கு புதுப்புது கதாபாத்திரங்களை இறக்குகிறீர்கள்? என்று தற்போது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு பின்னர் கதைக்களம் பெரிய அளவிற்கு சீரியஸாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். டிஆர்பி ரேட்டிங்கிலும் தொடர்ந்து பலத்த அடி வாங்கி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

‘எதிர்நீச்சல்’ சீரியலில் கடைசி மருமகளாக இருக்கும் ஜனனி தற்போது புதிய தொழில் ஒன்றை ஆரம்பிக்க முயற்சி செய்கிறார். அவருக்கு தொழில் போட்டியாக கிருஷ்ணசாமி மெய்யப்பன் மற்றும் ராமசாமி மெய்யப்பன் என்கிற இரண்டு வில்லன் கதாபாத்திரங்களை கதைக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். இவர்கள் ஒரு வகையில் ஜனனிக்கு சொந்தக்காரர்கள் என்றும், பழைய குடும்ப பகையை மனதில் வைத்துக்கொண்டு தற்போது ஜனனியை பழிவாங்க வந்திருப்பது போலவும் கதைக்களம் நகரும் என்று தெரிகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜனனி திறக்க இருக்கும் தொழிற்சாலையில் மெய்யப்பன் குடும்பத்தினர் பூஜை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் ஜனனி நீங்கள் எதற்கு இங்கு வந்து பூஜை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று கத்திக் கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கு கோபத்துடன் நடிகை டி.கே கலா அமர்ந்திருப்பது போன்ற ப்ரோமோவை சீரியல் குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். டி.கே கலா இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்ற தகவல் சில நாட்களாகவே இணையத்தில் பரவி வந்த நிலையில் அது தற்போது உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கதாபாத்திரங்களை வைத்தே சரியாக ஷூட்டிங் எடுக்க முடியாமலும், திரைக்கதை விறுவிறுப்பு இல்லாமலும் நகர்ந்து வரும் நிலையில் புதுப்புது ஆட்களை ஏன் கொண்டு வருகிறீர்கள் என்று சீரியல் குழுவினரை ரசிகர்கள் கோபத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun TV