ஆலியா, விஜே அர்ச்சனா, ரியாவை தொடர்ந்து சீரியலில் இருந்து விலகிய மற்றும் ஒரு பிரபலம்.!

ராஜா ராணி தொடரிலிருந்து சந்தியாக கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரியா விஸ்வநாதன் விலகிய நிலையில் தற்போது அடுத்து ஒரு முக்கியமான நபர் அந்த தொடரில் இருந்து விலகி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடர் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் இருக்கும் ஒரு பெண், இனிப்புக் கடை நடத்தி வரும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். பின்னர் ஒரு கட்டத்தில் தனது மனைவி ஐபிஎஸ் ஆக வேண்டும் என்கிற ஆசையை தெரிந்து கொள்கிறார். அதற்கு மாமியார் முட்டுக்கட்டையாக இருக்கிறார் இந்த தடைகள் அனைத்தையும் மீறி மனைவியை ஐபிஎஸ் ஆக்கினாரா? சந்தியா ஐபிஎஸ் ஆனாரா? அதற்கு அவரது மாமியார் ஒத்துக்கொண்டாரா? என்பது குறித்த கதை தான் ராஜா ராணி. தற்போது பல தடைகளை மீறி ஐபிஎஸ் ட்ரைனிங் அனைத்தையும் முடித்து சந்தியா சொந்த ஊருக்கே போஸ்டிங் வாங்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறார்.

தொடர்புடையவை  சீரியல் நடிகை கண்மணிக்கு திருமணம்..! காதலனை கரம்பிடித்தார் கண்மணி..!

ஆலியா, விஜே அர்ச்சனா, ரியாவை தொடர்ந்து சீரியலில் இருந்து விலகிய மற்றும் ஒரு பிரபலம்.! 1

விளம்பரம்

இந்த நிலையில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரியா விஸ்வநாதன் சீரியலில் இருந்து விலகுவதாக சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தது. நேற்று ஒரு வீடியோ வெளியிட்டு அந்த தகவலை உறுதி செய்திருந்தார் ரியா விஸ்வநாதன்.இது வதந்தி என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் ரியாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். விலகல் குறித்து காரணம் எதுவும் கூறாமல் இத்தனை நாட்களாக எனக்கு ஆதரவும் அன்பும் கொடுத்து வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி என்றும், நான் சந்தியாவாக தனது 200 சதவீத உழைப்பை கொடுத்தேன், இப்பொழுது புது சந்தியா நடித்து வருகிறார். நீங்கள் அந்த புது சந்தியாவிற்கு உங்களது ஆதரவை கொடுங்கள். இனிமேல் நான் ராஜா ராணி சீரியல் இல்லை, அந்த சீரியலில் இருந்து விலகி விட்டேன் என்று சொல்லி வீடியோவை வெளியிட்டு இருந்தார். நன்றாக நடித்து வந்த நிலையில் நீங்கள் விலகியது சரியில்லை என்று இதற்கு பலரும் தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்து இருந்தனர்.

தொடர்புடையவை  அறம் பட நயன்தாரா போல வந்த சுந்தரி.! இனிமே கலெக்டர் சுந்தரி.! 2.O ப்ரோமோ வெளியானது.!

ஆலியா, விஜே அர்ச்சனா, ரியாவை தொடர்ந்து சீரியலில் இருந்து விலகிய மற்றும் ஒரு பிரபலம்.! 3

விளம்பரம்

இந்த நிலையில் இன்று மற்றும் ஒரு அதிர்ச்சியாக சீரியலை இயக்கி வந்த பிரவீன் பென்னட் சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக இயக்குனர் ரமேஷ் பாரதி சீரியலை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரவீன் பென்னட் பாரதி கண்ணம்மா சீசன் 1 மற்றும் ராஜா ராணி சீசன் 1 மற்றும் சீசன் 2வை இயக்கி வந்தார். இந்த நிலையில் அவர் இன்று திடீரென சீரியலை விட்டு விலகி இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆலியா மானசா, ரியா விஸ்வநாதன், விஜே அர்ச்சனா ஆகியோர் விலகிய நிலையில் தற்போது இயக்குனர் பிரவீன் பென்னட்டும் விலகி இருப்பது ராஜா ராணி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆலியா, விஜே அர்ச்சனா, ரியாவை தொடர்ந்து சீரியலில் இருந்து விலகிய மற்றும் ஒரு பிரபலம்.! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment