அறம் பட நயன்தாரா போல வந்த சுந்தரி.! இனிமே கலெக்டர் சுந்தரி.! 2.O ப்ரோமோ வெளியானது.!

சுந்தரி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சுந்தரி சீரியலின் பாகம் ஒன்று முடிந்து தற்போது இரண்டாவது பாகம் 2 ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோவை தற்போது சீரியல் குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று எண்ணத்தில் கிராமத்தில் இருந்து வந்த சுந்தரி தற்போது ஐஏஎஸ் ஆகி பிரச்சனைகள் நிறைந்த ஒரு ஊருக்கு கலெக்டராக வந்திருக்கிறார். சன் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி பலரின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்தது சுந்தரி சீரியல். ஆரம்பத்தில் பலரும் இந்த சீரியலை விரும்பிப் பார்த்து வந்த நிலையில், பிற்போக்குத்தனங்கள் நிறைந்து இருக்கிறது என்று சொல்லி பலரும் இந்த சீரியலை பார்ப்பதை நிறுத்தியிருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அறம் பட நயன்தாரா போல வந்த சுந்தரி.! இனிமே கலெக்டர் சுந்தரி.! 2.O ப்ரோமோ வெளியானது.! 1

விளம்பரம்

இதில் ஹீரோ கார்த்திக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி சுந்தரிக்கு தெரியாமல் இரண்டாவதாக அனு என்பவரை திருமணம் செய்து கொண்டு அந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. பின்னர் கடைசியில் அனுதான கார்த்தியின் இரண்டாவது மனைவி என்பதை சுந்தரியும், சுந்தரி தான் கார்த்திக்கின் முதல் மனைவி என்று அனுவுக்கும் தெரிய வருகிறது. இந்த நிலையில் இந்த நாடகம் விரைவில் முடிவடைய இருப்பதாக செய்திகள் வெளியானது. அதேபோல அனுவும் சுந்தரியை ஏற்றுக்கொண்டு அனைவரும் ஒன்றாகி இருக்கின்றனர். கதை நிறைவடையும் தருவாயில் இருக்கும் பொழுது தற்போது புது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. சுந்தரி 2.0 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ப்ரோமோவை தற்போது சன் டிவி வெளியிட்டு இருக்கிறது.

தொடர்புடையவை  மகனின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய 'சூப்பர் சிங்கர்' அஜய் கிருஷ்ணா.! Photos உள்ளே.!

அறம் பட நயன்தாரா போல வந்த சுந்தரி.! இனிமே கலெக்டர் சுந்தரி.! 2.O ப்ரோமோ வெளியானது.! 3
அதில் சுந்தரி கலெக்டராக காரில் வந்து இறங்குகிறார். அப்போது அவரை வரவேற்கும் அதிகாரிகள் பிரச்சனைகள் நிறைந்த இந்த ஊருக்கு வந்திருக்கிறீர்கள், ஆண் கலெக்டராக முடியவில்லை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கிறார். அப்போது அவர்களுக்கு கோபமாக பதிலளித்துவிட்டு சுந்தரி செல்கிறார். உறவுக்காக போராடியவள் இனி ஊருக்காக போராடுவாளா? என்று கேள்வியுடன் அந்த ப்ரோமோ நிறைவடைந்து இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment