“என்ன மன்னிச்சிடுங்க மேடம்” சாருபாலவிடம் மன்னிப்பு கேட்ட கதிர்.! இனிமே ஆட்டமே வேற மாதிரி.!

வெளியிட்டது

‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. தங்கை ஆதிரையுடன் சென்று சாருபாலாவை சந்தித்து கதிர் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். எனவே சாருபாலா இந்த விவகாரத்தில் தலையிட்டு வாதாடி மருமகள்களை மீட்டுக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் பல திருப்புமுனைகளுடன் நடந்து வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் தற்போது மருமகளை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லும் காவல்துறையினர் அடித்து துன்புறுத்துகின்றனர். இதை பார்த்த ஞானம், சக்தி, கதிர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"என்ன மன்னிச்சிடுங்க மேடம்" சாருபாலவிடம் மன்னிப்பு கேட்ட கதிர்.! இனிமே ஆட்டமே வேற மாதிரி.! 1
இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கதிர் ஆதிரையுடன் இணைந்து சாருபாலாவை நேரில் சந்தித்து பேசுகிறார். உங்கள் வீட்டில் நடந்த பல பிரச்சினைகளுக்கு நான் தான் காரணம் என்று அவர் கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். எனவே சாருபாலா இனி இந்த வழக்கை கையில் எடுத்து மருமகள்களை மீட்டுக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் மறுபுறம் நந்தினி, “இவ்வளவு நாள் வெறுப்பை மட்டுமே காட்டிவிட்டு இப்பொழுது ஏன் அன்பை கொட்டுகிறார்கள்?” என்று அழுது கொண்டிருக்கிறார். நிலைமை இப்படி இருக்க வீட்டிற்கு சென்ற தம்பிகளிடம் குணசேகரன் கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அதில், “நாளை நீங்கள் எல்லாம் நாளை இந்த வீட்டிற்கு வரும் பொழுது பெரிய விஷயத்தை சொல்லப் போகிறேன்” என்று கூறுகிறார். அவர் என்ன சொல்லப் போகிறார்? என்பது தெரியாமல் சஸ்பென்ஸுடன் இந்த ப்ரோமோ முடிவடைந்திருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்