வெளிநாடு செல்லும் தனது மகனை வழி அனுப்பி வைக்க வந்த ராதிகா, தற்போது கண் கலங்கி அழுதிருக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கிழக்கே போகும் ரயில் என்கிற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி தற்போது தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராதிகா சரத்குமார். வெள்ளித்திரை சின்னத்திரை என அனைத்திலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். மேலும் ஒரு குடும்பத் தலைவியாக தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் ராதிகா சரத்குமார். நடிப்பது மட்டுமில்லாமல் சினிமா மற்றும் சீரியல்களை தயாரித்தும் வருகிறார். இவர் தயாரிப்பில் சித்தி, வாணி ராணி, அண்ணாமலை, அரசி போன்ற சீரியல்கள் மிகப் பிரபலமான சீரியல்களாகும். இந்த சீரியல்களின் மூலமாக ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்த ராதிகா அனைத்து இல்லத்தரசிகளின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். ரேடான் மீடியா நெட்வொர்க் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ராதிகா இந்த நிறுவனம் மூலமாக பல சீரியல்களை தயாரித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராதிகாவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து ஆகி இருந்தது. முதலில் பிரதாப் போர்த்தன் என்பவரிடம் திருமணம் ஆகிய விவாகரத்தான நிலையில் இரண்டாவதாக ஆங்கிலேயர் ஒருவருடன் திருமணமானது. இவருக்கு பிறந்த குழந்தை தான் ரயான். தற்போது தனது தாய் மற்றும் கணவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பின்னர் ராடான் மீடியா நிறுவனத்தின் சார்பில் கோடீஸ்வரன் என்கிற நிகழ்ச்சியை நடத்தி வந்தார் ராதிகா. அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த சரத்குமார் உடன் அவருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 24 ஆவது ஆண்டு ராகுல் என்கிற மகன் பிறந்தார். தற்போது ராகுல் வெளிநாட்டில் படித்து வருகிறார். மேலும் ராப் பாடகராக இருக்கும் அவர், சில ஆல்பங்களையும் தயாரித்து வருகிறார். தற்போது தனது மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க விமான நிலையத்திற்கு வந்த ராதிகா உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி இருக்கிறார்.

அந்த வீடியோவை பகிர்ந்த அவர் உணர்ச்சி பூர்வமாக பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், இது ஒரு உணர்ச்சிப்பூர்வமான இடுகை என்று எனக்குத் தெரியும், ஆனால் நேரம் செல்லச் செல்ல குடும்பத்தை விட்டு விலகி இருப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. குழந்தைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்க்காக கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறோம். அதையெல்லாம் நாங்கள் சமாளிக்கிறோம், எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. உழைக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இதுதான், எங்கள் குடும்பத்திற்கு சிறந்தவர்களாக இருக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம். மற்றொரு சவாலை எதிர்கொள்கிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். அந்தப் பதிவிற்கு கீழே தாயின் பாசம் உண்மையானது. உங்கள் கண்ணீர் உண்மையானது. நீங்கள் அழும்போது எங்களுக்கும் அழுகை வருகிறது என்று பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O