குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் குரேஷி பாட்ஷா படத்தில் வரும் ஆட்டோக்காரன் போலவும், புகழ் விஸ்வரூபம் கமல் புலவும் கெட்டப் அணிந்து வந்துள்ளனர். மேலும் தங்கதுரை பாட்ஷா பட ரகுவரன் போல கெட்டப் அணிந்து வந்திருக்கிறார். அவரை குரேஷி பங்கமாக கலாய்த்து தள்ளுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்தியாவிலேயே ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி என்று சொல்லலாம். சுட்டித்தனங்கள் நிறைந்த ஒருவரை கோமாளியாக வைத்துக்கொண்டு அவருடன் சேர்ந்து குக்குகளை சமைக்க சொல்வதும், அதற்கிடையில் அவர்களுக்கு நடுவர்கள் பல தொல்லைகளை கொடுப்பதுமாக இந்த நிகழ்ச்சி சுவாரசியத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் பலருக்கும் மன நிம்மதியை கொடுத்த நிகழ்ச்சியாக இது இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசனை வழக்கம் போல் ரக்ஷன் தொகுத்து வழங்க, வெங்கடேச பட், தாமு நடுவர்களாக இருக்கின்றனர். மதுரை காளையன், ராஜ் ஐயப்பா, இயக்குனர் கிஷோர், வி.ஜே விஷால் என்று நான்கு போட்டியாளர்கள் வெளியேறிவிட விசித்ரா, ஆண்ட்ரியன், சிவாங்கி, மைம் கோபி ஷெரின், ஸ்ருஷ்டி என ஆறு போட்டியாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். கடந்த வாரம் இம்யூனிட்டி பேண்டை ஷகீலா கைப்பற்றி விட்டு சென்றதால், இந்த வாரம் ஆறு பேரும் எலிமினேஷன் குக்கிங்கில் இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகியிருக்கிறது. அதில் வழக்கம் போல கோமாளிகள் பல கெட்டப்புகளை போட்டு அசத்தியிருக்கின்றனர். குரேஷி பாட்ஷா படத்தில் வரும் ரஜினிகாந்த் போல ஆட்டோக்காரன் கெட்டப்பில் வந்திருக்கிறார். புகழ் விஸ்வரூபம் படத்தில் வரும் கமல் போல கெட்டப் அணிந்து வந்திருக்கிறார்.

வழக்கம்போல இந்த வாரமும் காமெடி மற்றும் கலாட்டாக்களுக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television