எனக்கு கை கொடுத்து தூக்கி விட்டது நீங்க தான்.! வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன மைனா.!

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் மைனா நந்தினி தற்போது தனது முதல் வீடியோவை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். சின்னத்திரையை கலக்கிக் கொண்டிருக்கும் ஜோடிகளில் ஒருவராக இருப்பவர்கள் தான் மைனா நந்தினி மற்றும் யோகி. மதுரையில் பிளந்து வளர்ந்த நந்தினி சரவணன் மீனாட்சி சீரியலில் “மைனா” என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் அதுவே அவரது அடையாளமாகிப் போனது. பின்னர் சில காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றார். அதற்கு பின்னர் இவர் அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர், கல்யாணம் முதல் காதல் வரை போன்ற பல தொடர்களில் நடித்தார். நம்ம வீட்டுப் பிள்ளை, விருமன், விக்ரம், சர்தார் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னர் இவருக்கு யோகி உடன் திருமணம் நடைபெற்று துருவ் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறது. தற்போது மைனா பிக் பாஸ் சீசன் 6ல் ஒரு முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எனக்கு கை கொடுத்து தூக்கி விட்டது நீங்க தான்.! வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன மைனா.! 1

விளம்பரம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு வாரம் கழித்து வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அவர் தற்போது 103 நாட்களைக் கடந்து வீட்டிற்குள்ளே இருந்தார். ஆரம்பத்தில் மைனா பலராலும் விமர்சிக்கப்பட்டார். அவர் தனது கருத்தை எந்த இடத்திலும் முழுமையாக முன்வைப்பதில்லை, தைரியமாக பேசுவதில்லை, மணிகண்டன் உடன் சேர்ந்து கொண்டு சேஃப் கேம் விளையாடுகிறார் என்று மைனா மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் விமர்சனங்கள் அனைத்தையும் தகர்த்து தற்போது மைனா 103 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வந்தார். பின்னர் வித்தியாசமான முறையில் மைனா எலிமினேட் செய்யப்பட்டார். ஒரு ஏறி இறங்கும் மெஷின் ஒன்றில் ஏறி நின்று கொண்டு கீழே இறங்கிய அவர் பின்னர் வீட்டிற்குள் வரவே இல்லை. மிட் வீக் எலிமினேஷன் என்கிற பெயரில் மைனாவை வெளியே அனுப்பி இருந்தது பிக் பாஸ் டீம்.

தொடர்புடையவை  குடும்பத்துடன் சென்று புது கார் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா.! இதோ வீடியோ.!

எனக்கு கை கொடுத்து தூக்கி விட்டது நீங்க தான்.! வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன மைனா.! 3

விளம்பரம்

வெளியே வந்த பின் முதல் முறையாக தனது ரசிகர்களுக்கு நன்றி சொல்லி மைனா தற்போது தனது முதல் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோவை பகிர்ந்த அவர், மகத்தான சாதனைகள் புரிந்தவர்கள் யாவருமே தோல்வி பல கடந்து சென்றவர்களே..! ஆரம்பம் தொடங்கி இறுதி வரை எனக்கு ஆதரவு தெரிவித்த எனது செல்ல குட்டீஸ் அனைவருக்கும் ஐ லவ் யூ என்றும் பகிர்ந்திருக்கிறார். அவரின் முழு வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

 

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment