கட்டுடா என் கழுத்துல தாலிய.! நடு வீட்டில் நடந்த கயல் எழில் திருமணம்.! அதிரடியான ப்ரோமோ.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்களும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து வரும் நிலையில் அந்த வரிசையில் எப்பொழுதும் இரண்டு அல்லது முதலிடத்தை தக்க வைத்திருக்கும் ஒரு தொடர்தான் கயல் சீரியல். தற்போது இந்த சீரியலில் பல விறுவிறுப்பான திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், எழில் கயல் கழுத்தில் தாலி கட்டுவாரா இல்லையா என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் கார்த்திக் எழிலரசன் என்கிற கதாபாத்திரத்திலும், கதாநாயகியாக கயல்விழி என்கிற கதாபாத்திரத்தில் நடிகை சைத்ரா ரெட்டியும் நடித்து வருகின்றனர். தந்தையை இழந்து, குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் சுமக்கும் கயல் என்கிற பெண்ணின் கதையை மையப்படுத்தி இந்த கதை எடுக்கப்பட்டு வருகிறது. பல அதிரடியான திருப்பங்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டுடா என் கழுத்துல தாலிய.! நடு வீட்டில் நடந்த கயல் எழில் திருமணம்.! அதிரடியான ப்ரோமோ.! 1
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக எழிலுக்கும் கயலுக்கும் திருமணம் நடைபெறுமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் பலருக்கும் எழுந்திருக்கும் நிலையில், தற்போது ஒரு அதிரடியான ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் கயல் எழிலிடம் தாலியை நீட்டி தன் கழுத்தில் தாலியை கட்டுமாறு கூறுகிறார். வீட்டில் உள்ள அனைவரும் முன்பாக கயலை திருமணத்திற்கு வரக்கூடாது உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால் தான் ஏன் திருமணத்திற்கு வரக்கூடாது என்று கயல் கேட்கிறார். அப்போது நீ திருமணத்திற்கு வந்தால் உன் கழுத்தில் தான் தாலி ஏறும் என்று கூற, ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று தாலியை எடுத்து வருகிறார். கயல் உள்ளே சென்று பூஜை அறையில் இருந்து ஒரு மஞ்சள் தாலியை எடுத்து வந்து, அதை நேராக கொண்டு வந்து எழிலிடம் நீட்டுகிறார். எழிலை பார்த்து என்னை காதலிக்கிறாயா இல்லையா? கட்டுடா தாலியை என்று சொல்லி அவரது கைகளில் கொடுக்கிறார் கயல்.

விளம்பரம்
தொடர்புடையவை  மீண்டும் வந்த Confusion Room சேலஞ்..! இருக்கு இந்த வாரம் சம்பவம் இருக்கு..! பேய் வேடத்தில் வந்து கலக்கிய கோமாளிகள்..!

கட்டுடா என் கழுத்துல தாலிய.! நடு வீட்டில் நடந்த கயல் எழில் திருமணம்.! அதிரடியான ப்ரோமோ.! 3

அப்போது அந்த தாலியை வாங்கி கயல் கழுத்தில் எழில் கட்டப் போகிறார். அத்துடன் அந்த ப்ரோமோ முடிவடைகிறது வீட்டில் உள்ள அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்க ப்ரோமோவை சட்டென முடித்திருக்கின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. கமெண்ட்களில் பலர் வழக்கம் போல இதுவும் கனவாக தான் இருக்கும், எப்படியும் கயல் எழிலை தாலி கட்ட விட்டிருக்க மாட்டாள் என்று தங்களது யூகங்களை கருத்துகளாக தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமாவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun Tv

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment