வடநாட்டில் தனக்கு நடந்த அவமானம் குறித்து தமிழா தமிழாவில் வேதனையுடன் பேசிய தமிழிசை.!

தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தனக்கு ஆளுநராக இருந்தபோதிலும் ஏற்பட்ட அவமானம் குறித்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் வேதனையுடன் பேசியிருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதியாக இருக்கும் குமரி ஆனந்தனின் மகள்தான் தமிழிசை சௌந்தரராஜன். தந்தை காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும், அதற்கு நேர்மாறான கட்சியான பாரதிய ஜனதாவில் இணைந்திருந்தார். இவர் பாரதிய ஜனதா கட்சிக்காக கடுமையாக உழைத்தும், பணியாற்றியும் இருக்கிறார். இதற்காக அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பொறுப்பை வழங்கி தேசிய தலைமை அவரை அங்கீகரித்து இருந்தது. பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வடநாட்டில் தனக்கு நடந்த அவமானம் குறித்து தமிழா தமிழாவில் வேதனையுடன் பேசிய தமிழிசை.! 1

விளம்பரம்

பின்னர் அவருக்கு சரியான அங்கீகாரத்தை வழங்கும் நோக்கத்தில் அவரை தெலுங்கானாவின் ஆளுநராக நியமித்து உத்தரவிட்டிருந்தனர். பின்னர் பாண்டிச்சேரியின் துணைநிலை ஆளுநராக இருந்த கிரன்பேடியின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து தற்போது புதுச்சேரியையும் அவர் சேர்த்து கவனித்துக் கொண்டு வருகிறார். தமிழகத்திலிருந்து ஒருவர் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கட்சி பேதங்களை தாண்டி பலரும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் தற்போது தமிழிசை பங்கெடுத்து இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் புதுப்பொலிவுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. பெண் சுதந்திரம் போதுமானதாக இருக்கிறது, போதுமானதாக இல்லை என்று இரண்டு தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

தொடர்புடையவை  உலகம் எங்கும் உள்ள என் ரசிகர்களுக்கு நன்றி.! வெளியேறிய பின்னர் முதல் வீடியோவை வெளியிட்ட கதிர்.!

வடநாட்டில் தனக்கு நடந்த அவமானம் குறித்து தமிழா தமிழாவில் வேதனையுடன் பேசிய தமிழிசை.! 3
அப்போது பேசிய தமிழிசை சௌந்தரராஜன் தான் உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற ஒரு ஆளுநர் மாநாட்டிற்கு சென்றிருந்ததாகவும், அப்போது தான் ஒரு வரிசையில் நின்று கொண்டிருந்தபோது ஒரு ஐஏஎஸ் அதிகாரி தன்னை தவிர்த்து விட்டு தன்னை தாண்டி இருக்கும் நபருக்கு பூங்கொத்து கொடுத்து தன்னை அவமானப்படுத்தி விட்டதாகவும் வேதனையுடன் பேசினார். இதுவே நான் ஆண் ஆளுநராக இருந்தால் எனக்கு இவ்வாறு நடந்திருக்காது என்று வேதனை தெரிவித்தார். ஆளுநராக இருந்த போதும் பெண் என்பதால் தனக்கு மரியாதை கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்து இருக்கிறார் தமிழிசை. அந்த காணொளி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Zee Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment