“இந்த முட்டாள் கூட்டத்தை ஓட விட போறோம்” சபதம் எடுத்த மருமகள்கள்.! ஸ்பெஷல் 1 மணி நேர ப்ரோமோ

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் வரும் ஞாயிறு அன்று ஸ்பெஷலாக ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோவை தற்போது சீரியல் குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். பல திருப்பங்களுடன் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்துவரும் ஒரு சீரியல் தான் ‘எதிர்நீச்சல்’ தற்போது இந்த சீரியலின் கதைப்படி குணசேகரனின் தங்கையாக இருக்கும் ஆதிரை வீட்டிலிருந்து வெளியேறி சாருபாலா வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார். அவர் அருணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார். அதே சமயம் ஜனனி புதிதாக தொடங்க இருக்கும் கம்பெனிக்கு புது சிக்கல் ஏற்படுகிறது. ஜனனியின் சொந்தக்காரர்கள் அந்த கம்பெனியை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"இந்த முட்டாள் கூட்டத்தை ஓட விட போறோம்" சபதம் எடுத்த மருமகள்கள்.! ஸ்பெஷல் 1 மணி நேர ப்ரோமோ 1
ஜனனி நியாயம் கேட்க சென்ற நிலையில் அது தன்னுடைய சொந்தக்காரர்கள் என்பதை ஜனனிக்கு தெரிய வருகிறது. அப்போது சொத்தை எழுதித் தருவதாக கூறி ஜனனியின் தந்தையை அவர்கள் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்கின்றனர். இதனால் நிற்கதியாக நிற்கும் ஜனனியின் தாயாரை ஜனனி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறார். அங்கு விசாலாட்சிக்கும் ஜனனியின் தாயாருக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. இதற்கிடையில் ஈஸ்வரியின் தேர்தலில் என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது. இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை 2:00 மணிக்கு தொடர் ஒரு மணி நேர ஸ்பெஷலாக ‘எதிர்நீச்சல்’ சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.


அதற்கான ப்ரோமோவை தற்போது சன் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்