இப்ப நீங்களா வரீங்களா.? இல்ல அள்ளி போட்டுட்டு போகவா.? AGS-ஐ மிரட்டிய போலீஸ்.!

‘எதிர்நீச்சல்’ சீரியலில் நாளைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது போலீசார் குணசேகரன் வீட்டிற்குள் வந்து அவரை கைது செய்து அழைத்துச் செல்ல கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் குணசேகரனும், கதிரும் வர முடியாது என்ற அடம் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படி வரவில்லை என்றால் ஃபோர்ஸை அழைத்து வந்து உங்களை தூக்கிச் செல்ல வேண்டி வரும் என்று போலீசார் மிரட்டுகின்றனர். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. ‘எதிர்நீச்சல்’ சீரியலில் அப்பத்தாவை கொலை செய்தது ஜீவானந்தம் என்று சொல்லி குணசேகரன் போலீசில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் குணசேகரன் சொன்னதை அப்படியே எழுதி வைத்திருப்பதாக கூறி இதை மறு விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்ப நீங்களா வரீங்களா.? இல்ல அள்ளி போட்டுட்டு போகவா.? AGS-ஐ மிரட்டிய போலீஸ்.! 1
இந்த நிலையில் குணசேகரனுக்கு எதிரான வழக்கில் ஆஜராகுமாறு ஜனனி சாருபாலாவை அணுகுகிறார். சாருபாலாவும் ஜனனியின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கில் வழக்கறிஞராக ஆஜராகிறார். நிலைமை இப்படி ஒரு புறம் இருக்க மறுபுறம் தேர்தலில் தன் சார்பாக ஈஸ்வரியை களம் இறக்க குணசேகரன் திட்டமிடுகிறார். அதிலும் அவர் வெற்றி பெறுகிறார். ஈஸ்வரி சாருபாலாவிற்கு எதிராக தேர்தலில் நிற்க முடிவெடுக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில், ஆதி குணசேகரன் மற்றும் அவரது தம்பிகளை தேடி போலீசார் வீட்டிற்கு வருகின்றனர். வீட்டிற்கு வந்த அவர்கள் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறுகின்றனர். ஆனால் காவல் நிலையத்திற்கு வர முடியாது என்று கதிர் திமிராக பதிலளித்துக் கொண்டிருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  திடீரென திருமணத்தை முடித்த பாரதி கண்ணம்மா நடிகர்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

இப்ப நீங்களா வரீங்களா.? இல்ல அள்ளி போட்டுட்டு போகவா.? AGS-ஐ மிரட்டிய போலீஸ்.! 3
அப்போது போலீசார் நீங்கள் இப்போது வரவில்லை என்றால் படையை கூட்டி வந்து உங்களை தூக்கிச் செல்ல வேண்டி வரும் என்று மிரட்டல் விடுக்கிறார். இதனால் குணசேகரன் மற்றும் கதிர் ஆகிய அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment