“யோவ் ஒன்னு நீ திருந்து, இல்ல என்ன திருந்தி வாழ விடு” குணசேகரனை வெளுத்து வாங்கிய கதிர்.! Promo உள்ளே.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது ஆதி குணசேகரனை அவரது தம்பி கதிர் எதிர்த்து சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். “ஒன்று நீ மாறு, இல்லை என்னையாவது மாறவிடு” என்று சொல்லி கதிர் பேசிய பேச்சு, ஆதி குணசேகரனுக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. ‘எதிர்நீச்சல்’ சீரியலில் தற்போது கதைப்படி தர்ஷினியை கரிகாலனுக்கு திருமணம் செய்து வைக்க ஆதி குணசேகரன் முடிவெடுக்கிறார். இந்த நிலையில் தர்ஷினியை மர்ம நபர்கள் சிலர் காரில் கடத்திச் சென்று விடுகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"யோவ் ஒன்னு நீ திருந்து, இல்ல என்ன திருந்தி வாழ விடு" குணசேகரனை வெளுத்து வாங்கிய கதிர்.! Promo உள்ளே.! 1
தர்ஷினியை கடத்தியது யார் என்று தெரியாமல் ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி, சக்தி ஆகியோர் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். கரிகாலன் மற்றும் ஜான்சிராணி கடத்தி இருப்பார்கள் என நினைத்து ஜனனி போலீசில் புகார் அளிக்க, அவர்கள் இருவரையும் கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் அடித்து துவைக்கின்றனர். அப்போது அங்கு வரும் குணசேகரன் அவர்கள் இருவரையும் காப்பாற்றி வெளியில் அழைத்து வருகிறார். அந்த சமயம் கதிர் ஆதி குணசேகரனைப் பார்த்து, “தர்ஷினி சின்ன பொண்ணு, அவருக்கு போய் திருமணம் செய்து வைக்க பார்க்கிறீர்களே? என்று கோபமாக கேள்வி எழுப்புகிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், குணசேகரனை பார்த்து, “ஒன்னு நீ மாறு, இல்லை என்னை மாறவிடு” என்று சொல்லி கோபத்தில் கத்திக் கொண்டிருக்கிறார். சக்தியை தொடர்ந்து தற்போது கதிரும் திருந்தி தனது மனைவி மற்றும் மகளுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்