ஒருத்தனையும் சும்மா விட மாட்டேன்.! பத்திரகாளியாக மாறிய ரேணுகா.! பம்மிய ஆதி குணசேகரன்.!

வெளியிட்டது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரேணுகா தற்போது ஆதி குணசேகரனிடம் ஒருவனையும் சும்மா விடமாட்டேன் என்று கத்துவது போலவும் இதனால் ஆதி குணசேகரன் சற்று அமைதியாக பின்வாங்கியது போலவும் ப்ரோமோவை வெளியிட்டு இருக்கின்றனர். சன் தொலைக்காட்சி மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சின்னத்திரை உலகிலும் டாப் ஹிட் தொடராக ஓடிக்கொண்டிருக்கிறது எதிர்நீச்சல் சீரியல். டிஆர்பி ரேட்டிங்கில் 11.6 புள்ளிகளை பெற்று இதுவரை எந்த சீரியலும் செய்ய முடியாத சாதனையை எதிர் நீச்சல் சீரியல் செய்து காட்டி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் கடந்த வாரம் ஒளிபரப்பாகிய ஆதிரை கரிகாலன் திருமணம் தான். இந்த சீரியலின் முக்கிய நபராக இருக்கும் ஆதி குணசேகரனின் கடைசி தங்கையாக இருப்பவர் ஆதிரை. இவர் அருண் என்ற நபரை காதலித்து வருகிறார். இந்த விஷயம் வீட்டில் உள்ள மருமகள்களை தவிர ஆண்கள் யாருக்கும் தெரியாது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருத்தனையும் சும்மா விட மாட்டேன்.! பத்திரகாளியாக மாறிய ரேணுகா.! பம்மிய ஆதி குணசேகரன்.! 1

ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணம் செய்து வைக்க மருமகள்கள் முடிவு செய்த நிலையில், கடைசி நிமிடத்தில் அதை கண்டுபிடித்த ஆதி குணசேகரன் வலுக்கட்டாயமாக கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் செய்து வைக்கிறார். ஆதிரை வேண்டா வெறுப்பாக கரிகாலன் வீட்டில் சென்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் ரேணுகா ஆதி குணசேகரனைப் பார்த்து ஒருவனையும் சும்மா விடமாட்டேன் என்று கோபத்தில் கத்துகிறார். இதனால் கடுப்பான ஆதி குணசேகரன் நீ என்னம்மா செய்வ என்று பதிலுக்கு கேட்கிறார். அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று ரேணுகா பதிலளிக்கிறார். இதனால் ஆதி குணசேகரன் சற்று பின்வாங்கி இருப்பதாக தெரிகிறது. பின்னர் ஜனனியிடம் பேசும் ஆதி குணசேகரன் எல்லாவற்றிற்கும் நீ தான் காரணம்.

எல்லாவற்றிற்கும் ஆரம்பப் புள்ளி நீதான், உனக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன். அந்த வீட்டில் இருந்து கொண்டு இந்த வீட்டிற்கு நீ வெடி வைக்கிறாயா? என்று ஜனனியை பார்த்து கோபமாக கேட்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்