சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தியை சீரியல் குழுவினர் அறிவித்து இருக்கின்றனர். அந்த செய்தியை தற்போது ஒரு ப்ரோமோவாக வெளியிட்டு தற்போது அந்த மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருக்கின்றனர். சின்னத்திரை வரலாற்றில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் ஒரு நாடகம் என்று சொன்னால் அது எதிர்நீச்சல் தான். இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் நடிகர்கள் மாரிமுத்து, கமலேஷ், விபுராமன், சபரி பிரசாந்த், நடிகைகள் கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, சத்யப் பிரியா, பாம்பே ஞானம் என்று மிகப்பெரிய நடிகர் பட்டாளத்துடன் இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட ஆண்களுக்கு, படித்த பெண்கள் திருமணம் செய்து கொண்டு வருகின்றனர். பிற்போக்கத்தனங்களால் அவர்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் தற்போது அந்த பிற்போக்குத் தனங்களில் இருந்து எவ்வாறு மீண்டு வருகின்றனர் என்பது தான் கதையின் மையக்கருவாக இருந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கதைப்படி குடும்ப தலைவராக இருக்கும் ஆதி குணசேகரனின் அப்பத்தாவின் 40% பங்குகள் ஜீவானந்தம் பெயருக்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த விஷயம் ஜனனிக்கு தெரிய வந்து ஜீவானந்தம் யார் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். மறுபுறம் ஆதிரை கரிகாலன் திருமணம் நடந்து முடிந்து அவருக்கு முதலிரவு நடக்காமல் இருந்து வருகிறது. அந்த ஏற்பாடுகளை தற்போது ஆதி குணசேகரன் செய்ய சொல்லி வீட்டு மருமகள்களிடம் உத்தரவு போட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் யாருமே ஆதி குணசேகரின் பேச்சுக்கு செவிமடுக்கவில்லை. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஜனனியும் கரிகாலன் மீது வழக்கு தொடுக்கலாம் என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார். இந்த பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க தற்போது ஒரு புதிய ப்ரோமோ ஒன்றை நாடகக் குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர்.
அதாவது எதிர்நீச்சல் சீரியல் இதனால் வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வந்தது. இனி வரும் நாட்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமையும் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டு இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் ஏகத்துக்கும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஆதி குணசேகரன், ரேணுகா, ஞானம், நந்தினி, ஜனனி மற்றும் சக்தி ஆகிய அனைவரும் இணைந்து இந்த ப்ரோமோவை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் இனி வாரம் ஏழு நாட்களும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க இரவு ஒன்பது முப்பது மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Sun TV