பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்கியலட்சுமி தற்போது கோபிநாத் பெயரில் இருக்கும் வீட்டை தன் பெயருக்கு எழுதி வாங்கியிருக்கிறார். சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்ற அவர்கள் தற்போது பாக்யாவின் பெயருக்கு அந்த வீட்டை எழுதி வாங்கி இருக்கின்றனர். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் மக்களின் மனம் கவர்ந்த தொடராக இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் அவ்வப்போது முதலிடத்தை பிடித்து வரும், இந்த தொடர் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. கோபியின் மூத்த மனைவி பாக்யா கோபி கட்டிய வீட்டில் வசித்து வருகிறார். கோபி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்திருந்தார். ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் தனது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் மூத்த மனைவி பாக்யாவின் வீட்டிலேயே வந்து வசித்துக் கொண்டிருந்த கோபி, பாக்யாவிடம் வீட்டை காலி செய்து விடுமாறும் தனக்கு சேர வேண்டிய மீதமுள்ள பணம் 18 லட்சம் ரூபாயை கொடுத்து விடுமாறும் பாக்யாவை வற்புறுத்தி வந்தார். இதற்கிடையில் சமையல் காண்ட்ராக்ட் எடுத்த பாக்யா 8 லட்ச ரூபாயை திரட்டி இருந்தார். அவரது மகன்கள் செழியன் மற்றும் எழில் இருவரும் இணைந்து 10 லட்ச ரூபாயை கொண்டு வந்து பாக்யாவில் கைகளில் கொடுத்தனர். இந்த நிலையில் 18 லட்சத்தை கோபியின் முகத்தில் வீசி எறிந்த பாக்யா அவரையும் அவரது இரண்டாவது மனைவி ராதிகாவையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று வெளியாக இருக்கும் ப்ரோமோவில் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்ற பாக்யா, எழில், ராமமூர்த்தி மற்றும் கோபி 4 பேரும் பாக்யாவின் பெயருக்கு அந்த வீட்டை மாற்றி எழுதி வாங்கி இருக்கின்றனர்.

பின்னர் வீட்டிற்கு வரும் பாக்யா மற்றும் எழில் இருவரும் வீட்டிற்கு வெளியே பாக்கியலட்சுமி இல்லம் என்கிற பெயர்பலகையை மாற்றுகின்றனர். இதை பார்க்கும் கோபி மற்றும் ராதிகா இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். அப்போது எழில் இனிமேல் இது பாக்கியலட்சுமி வீடு, அந்த வீட்டிற்கு நீங்கள் எந்த காரணத்தை கொண்டும் வரக்கூடாது என்று மிரட்டி விட்டு செல்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Embed Credits: Vijay Television