கையில் அருவாளை தூக்கிய ஆதிரை.! பயந்து நடுங்கிய ஆதி குணசேகரன்.! பரபரப்பான ப்ரோமோ.!

வெளியிட்டது

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆதிரை தற்போது கோபத்தில் அருவாள் மனையை எடுக்கிறார். அவரை ரேணுகா தற்போது தடுத்து நிறுத்துகிறார். அதனால் இன்றைய சீரியலின் ப்ரோமாவை பார்த்த பின்னர், இந்த எபிசோடு வேற லெவலில் இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் ஆவருடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சுமார் 400 எபிசோடுகளை கடந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் எதிர்நீச்சல் சீரியல். தற்போது ஆதிரை கல்யாணம், அப்பத்தாவின் 40% பங்குகளை அபகரிக்க துடிக்கும் குணசேகரன் ஒரு பக்கம், யாருக்கும் தெரியாமல் அப்பத்தாவின் பெயரை தன் பெயருக்கு மாற்ற முயற்சிக்கும் ஜீவானந்தத்தின் திட்டம், இதற்கிடையே ஜீவானந்தத்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பயணிக்கும் ஜனனி, அவரது நண்பர் கௌதம் என கதை விறுவிறுப்பின் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. ஜீவானந்தம் அமைப்பில் சேர்ந்திருக்கும் கௌதம், தான் ஜனனியின் நண்பர் என்பதை தற்போது போட்டு உடைத்து இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கையில் அருவாளை தூக்கிய ஆதிரை.! பயந்து நடுங்கிய ஆதி குணசேகரன்.! பரபரப்பான ப்ரோமோ.! 1

ஜனனியின் நண்பர் என்பதால் ஜீவானந்தம் அப்பத்தாவின் சொத்துக்களை அபகரிப்பது தவறு என்று பேசியிருக்கிறார். இது ஒரு புறம் இருக்க தற்போது இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது அதில் சமையலறையில் வழக்கம் போல நந்தினி, ரேணுகா, ஆதிரை, ஜனனி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஆதிரை கரிகாலன் திருமணத்தை எதிர்த்து யாராவது வழக்கு தொடுத்தால் இந்த திருமணம் செல்லாது என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு நந்தினியோ அதை நாமே செய்யலாமே என்று கூற, ஆதிரை மனதில் என்ன நினைக்கிறார் என்பதை தெரிய வேண்டும் என்று ஜனனி கூறுகிறார். அதற்கு ஆதிரை நான் முதலில் அருணைப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார். அப்போது அங்கு வரும் குணசேகரன், ஞானம் மற்றும் கரிகாலன் மூவரும் ஆதிரை மற்றும் கரிகாலனின் முதலிரவு ஏற்பாடுகள் குறித்து கேள்வி கேட்க, அதெல்லாம் எங்களால் செய்ய முடியாது என்று நந்தினி பதில் கூறுகிறார்.

கரிகாலன் இவர்கள் எல்லாம் என் திருமணம் முடிந்த நாளிலிருந்து இதையே தான் சொல்கிறார்கள் என்று சொல்ல, ஆதிரை எனக்கு இவனைப் பிடிக்கவில்லை என்று சொல்லி அருவாள் மனையை எடுக்கிகிறார். பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆதிரையை ரேணுகா மற்றும் மற்ற மருமகள்கள் சமாதானப்படுத்துகின்றனர். வழக்கம் போல குணசேகரன் தனது பிடிவாத குணத்தால் திருமணம் செய்து வைத்தது போல முதலிரவையும் நடத்தி வைப்பாரா? ஆதிரை அருணை சென்று பார்ப்பாரா? ஜனனி இந்த திருமணம் குறித்து வழக்கு தொடுப்பாரா? என்பதெல்லாம் அடுத்தடுத்து ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்து வருகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்