வைரமுத்து Cheap ஆன மனிதர், என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.! பிண்ணனி பாடகி குற்றச்சாட்டு.!

கவிஞர் வைரமுத்து பற்றி ஏற்கனவே பின்னணிப் பாடகி சின்மயி பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் தற்போது அவரை தொடர்ந்து மற்றொரு பாடகியும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். அந்த காணொளியை சின்மயி தற்போது பகிர்ந்து இருக்கிறார். தமிழ் திரையுலகின் கவிஞராகவும் பாடல் ஆசிரியராகவும் இருந்து வருபவர் கவிஞர் வைரமுத்து. திரைத்துறையில் பல ஆண்டுகளாக பாடல்களை எழுதி வரும் இவர், இன்று 70-வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு ஒரு புறம் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது வீட்டிற்க்கே நேரில் சென்று பொன்னாடை அணிவித்தும் மலர் கொத்து வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இது குறித்து அதிருப்தி தெரிவித்திருந்த சின்மயி சமூக வலைத்தளத்தில் முதலமைச்சரை கடுமையாக சாடி இருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வைரமுத்து Cheap ஆன மனிதர், என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.! பிண்ணனி பாடகி குற்றச்சாட்டு.! 1

விளம்பரம்

வைரமுத்து மீது புகார் அளித்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக நட்பு பாராட்டி வருகிறது. திமுகவின் தயவால் தான் அவர் இப்படி பெண்களை சீரழித்து விட்டு பயமின்றி சுற்றிக் கொண்டிருக்கிறார் என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்த நிலையில் மற்றொரு பாடகி தற்போது வைரமுத்து பற்றி பேசிய காணொளியை சின்மயி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். வினைதா என்கிற அந்த பாடகி பல ஆல்பம் பாடல்களை பாடி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி இருக்கிறார். அவர் வைரமுத்து குறித்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை சின்மயி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, வைரமுத்துவுக்கு எதிராக பேசிய சின்மயியை நான் ஆதரிக்க காரணம் அவர் உண்மையை பேசினார், அவருக்கு போலவே எனக்கும் ஒரு முறை வைரமுத்துவால் சில கசப்பான அனுபவங்கள் நடந்தது.

தொடர்புடையவை  மகனுடன் மும்பை சென்ற சூர்யா.! மகனை போட்டோ எடுக்காதீங்க.! சூர்யா போட்ட கண்டிஷன்.!

வைரமுத்து Cheap ஆன மனிதர், என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.! பிண்ணனி பாடகி குற்றச்சாட்டு.! 3

விளம்பரம்

வைரமுத்து நல்ல மனிதர் கிடையாது, அவர் சீப்பாக நடந்து கொள்வார். நிறைய பெண்களிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறார். எப்போதும் முகத்தை பார்த்து பேசமாட்டார். என்னை ஒருமுறை பாடச் சொல்லி வருமாறு தனியாக ஒரு இடத்திற்கு அழைத்தார், மேலும் வைரமுத்து இதுபோல பல பெண்களிடம் தவறாக நடந்து இருக்கிறார். அவரை எங்கே பார்த்தாலும் எனக்கு “வந்துட்டாண்டா” என்று தான் தோன்றும். என்று அந்த பேட்டியில் வினைதா பேசியிருக்கிறார். அந்த வீடியோவை பகிர்ந்த சின்மயி வைரமுத்து பற்றிய வினைதா பேசிய வீடியோவை இங்கு பகிர்ந்ததற்கு காரணம் அவரும் என்னைப் போல் பாதிக்கப்பட்ட ஒரு பாடகி தான். தமிழக அரசியல்வாதிகளால் ஆதரிக்கப்படும் இது போன்ற தமிழ் கவிஞர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேச முன்வர வேண்டும் என்று பகிர்ந்துள்ளார். வைரமுத்துவின் பிறந்தநாளில் இது போன்ற காணொளிகள் வைரலாகி வருவது அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment